பிரியங்கா ஆல்கஹால் குடித்தாரா?: சுப்ரமணியசாமி வீட்டை முற்றுகையிட்ட காங்கிரசார்
அமேதி: பிரியங்கா ஆல்கஹால் குடித்திருப்பார் என சுப்பிரமணிய சாமி கூறியதை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரியாங்கா, தனது சகோதரரும், பா.ஜ.க. வேட்பாளருமான வருண் காந்தியை ''காந்தி குடும்ப நெறிமுறையில் இருந்து வருண் விலகி விட்டார். அவர் தவறான பாதையை தேர்வு செய்து விட்டார்'' எனக் கூறினார்.
அதற்கு வருண் காந்தி ''நான் சரியான பாதையில்தான் செல்கிறேன்'' என பதிலளித்தார்.

குடும்ப தேநீர் விருந்து
இதையடுத்து, ''இது ( நாடாளுமன்ற தேர்தல்) குடும்ப தேநீர் விருந்து அல்ல; இது கொள்கைக்கான யுத்தம்...எங்கள் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகம் ஆகும்'' என வருண் காந்தியை தாக்கி பிரியங்கா கருத்து தெரிவித்தார்.
அறிக்கைப் போர்
இதற்கு பதிலளித்த வருண் காந்தி ''நான் அமைதியோடு இருப்பதை என்னுடைய பலவீனமாக நினைக்கக் கூடாது. பிரியங்கா தனி நபர் தாக்குதலை கைவிட்டு, வேலைவாய்ப்பு, ஊழல், ஏழ்மை பற்றி விவாதிக்க வேண்டும்'' எனக் கூறினார்.
சுப்ரமணியசாமி அவதூறு
இவர்களின் வார்த்தை போர் குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, ''பிரியங்கா அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் சாப்பிட்டிருப்பார் போலும். அதனால்தான் இவ்வாறு பேசி வருகிறார். பிரியாங்காவின் இந்த பேச்சு அவருக்கும், அவரது கணவருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது'' எனக் கூறினார்.
வீடு முற்றுகை
இதையடுத்து, சுப்பிரமணிய சாமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிசார், டெல்லியில் உள்ள சுப்பிரமணிய சாமியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் சுப்பிரமணிய சாமிக்கு எதிராக கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் காங்கிரஸ் தொண்டர்களை கலைத்தனர்.
போலீஸ் குவிப்பு
காங்கிரஸ் தொண்டர்களின் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications