என்னடா இது.. பட்டாசெல்லாம் வெடிக்கறீங்க.. "கடை" திறந்த சந்தோஷம்.. குபீர் உற்சாகத்தில் குடிமகன்கள்!
கோலார்: கர்நாடகாவின் கோலாரில் மதுபான கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டதை பட்டாசு வெடித்து கொண்டாடி தீர்த்திருக்கின்றனர் குடிமகன்கள்.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவுதைத் தடுக்க நாடு முழுவதும் 40 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இந்த லாக்டவுன் தற்போது மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் இந்த லாக்டவுன் நீட்டிப்பின் போது பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனையடுத்து பெரும்பாலான மாநிலங்களில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.
|
குடிமகன்கள் காத்திருப்பு
மதுபான கடைகள் திறக்கப்பட்ட அனைத்து மாநிலங்களிலும் காலை முதல் பல கிலோ மீட்டர் நீளத்துக்கு குடிமகன்கள் வரிசைகளில் காத்திருந்து சரக்குகளை வாங்கி சென்றனர். டெல்லியில் குடிமகன்கள் கூட்டத்தால் மிரண்டு போய் மதுபான கடைகள் பல இழுத்து மூடப்பட்டன.

சமூக வலைதளங்களில் குடிமகன்கள்
சமூக வலைதளங்களில் இந்த குடிமகன்கள் கூட்டம் பற்றிதான் பேச்சு. குடிமகன்கள் கூடி இருப்பது, சமூக விலகலை கடைபிடிக்காமல் இருப்பது ஆகியவற்றை முன்வைத்து விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்த குடிமகன்களை தீனியாக்கி மீம்ஸ்களும் ரெக்கை கட்டி பறக்கின்றன. தமிழகத்தில் மதுபான கடைகள் திறக்கப்படவில்லை.

எல்லை தாண்டிய தமிழர்கள்
இதனால் கர்நாடகா, ஆந்திரா எல்லை பகுதிகளுக்கு சென்று காத்திருந்து மதுபானங்களை வாங்கி வந்தனர் தமிழக குடிமகன்கள். இந்த குடிமகன்களில் உச்சகட்ட அட்டகாசம் ஒன்றுதான் கர்நாடகாவில் அரங்கேறி உள்ளது. கர்நாடகாவின் கோலாரில் சமூக இடைவெளியின்றி குடிமகன்கள் மதுபான கடை முன்பு கூடி நிற்கின்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மதுபான கடை முன்பு பட்டாசுளை கொளுத்தி மகிழ்ந்தனர்.

பட்டாசு வெடித்த குடிமகன்கள்
இன்னொரு குடிமகனோ கடைக்கு வரும்போதே பட்டாசுகளுடன் வந்துவிட்டார். 40 நாட்கள் கடையை திறக்காமல் இன்று திறந்திருப்பது திரில்லாக இருக்கிறது என்று கூறி பட்டாசுகளை ஆனந்தமாக வெடித்து சரக்குகளை வாங்கிச் சென்றார். குடிமகன்களின் இந்த குசும்புதனங்கள் ரசிக்கப்பட்டாலும் இன்னொரு பக்கம் பொதுமக்களிடையே கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications