பல்லாயிரம் பேருக்கு வேலை.. புதிய முதலீடுகளை ஈர்க்கும் ஒடிசா.. கொரோனாவிற்கு இடையிலும் கலக்குகிறது!
ஒடிசாவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அம்மாநில அரசு ரூ 8,850.19க்கு முதலீடுகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
புவனேஷ்வர்: ஒடிசாவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அம்மாநில அரசு ரூ 8,850.19க்கு முதலீடுகளுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது.
ஒடிசாவில் கொரோனா தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது. ஒடிசாவில் மொத்தம் 82 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 30 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். ஒரே ஒருவர்தான் அங்கு பலியாகி உள்ளார். மீதம் இருக்கும் 51 பேர் நல்ல உடல் நிலையுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

எல்லா மாநிலங்களை போல ஒடிசாவில் கொரோனா காரணமாக பெரிய பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் அம்மாநில அரசின் பொருளாதார சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. முக்கியமாக கொரோனா லாக் டவுன் காரணமாக நலிவடைந்து இருக்கும் நிறுவனங்கள், சிறுகுறு தொழில் நிறுவனங்களை மீண்டும் செயல்பட வைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக உயர்மட்ட குழு கூட்டத்தில் முக்கியமான விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டது. அந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலத்தின் நிதி அமைச்சர் நிரஞ்சன் பூஜாரி, அமைச்சர்கள் சுஷாந்த் சிங், மாலிக், தீபியா சங்கர் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனையின் முடிவில் ஒடிசாவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அம்மாநில அரசு ரூ 8,850.19க்கு முதலீடுகளுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது. மொத்தம் இரண்டு பெரிய முதலீடுகளுக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. மொத்தம் இதன் மூலம் உடனடியாக 5250 பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
கொரோனாவால் பாதிப்படைந்து இருக்கும் அம்மாநில மக்களை இந்த செய்தி மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications