ஸ்பெக்ட்ரம்: குறுக்கு விசாரணை செய்வதில் தாமதமா? சிபிஐ வழக்கறிஞரை கண்டித்த நீதிபதி சைனி!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மிகவும் தாமதமாக செய்யக் கூடாது என்று சிபிஐ வழக்கறிஞருக்கு டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி கண்டிப்புடன் கூறினார்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆ. ராசா, தனது தரப்பு சாட்சியாக அவரே ஆஜராகி கடந்த 2 வாரங்களாக சாட்சியம் அளித்து வருகிறார்.

அதே கேள்விகள்..
அவரிடம் சிபிஐ வழக்கறிஞர் கோயல் நேற்று குறுக்கு விசாரணை நடத்தினார். ஆனால் முந்தைய குறுக்கு விசாரணையின்போது சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் லலித் எழுப்பிய கேள்விகளையே அவர் கேட்டுள்ளார்.

நீதிபதி அதிருப்தி
இதனால், அதிருப்தியடைந்த நீதிபதி சைனி, ஒரே கேள்வியை வெவ்வேறு வடிவில் கேட்பதை சிபிஐ தரப்பு மூத்த வழக்கறிஞர் தவிர்க்க வேண்டும். கடந்த 17ந் தேதி விசாரணையின்போதே சிபிஐ வழக்கறிஞருக்கு 2 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சரே சாட்சியம்...
எனது நீதிபதி பணி அனுபவத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் அமைச்சர் சாட்சியம் அளிக்க முன்வந்ததில்லை. ஆனால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரே சாட்சியம் அளிக்க முன்வரும்போது அவரிடம் குறுக்கு விசாரணை நடத்த சிபிஐ தயக்கம் காட்டுவது ஏன்? கேள்விகள் எழுப்பும் நடவடிக்கையை தாமதப்படுத்துவது ஏன்?

அவகாசம்
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ வழக்கறிஞர் தன்னை தயார்படுத்திக் கொள்ள அவகாசம் அளிக்கும்.

தாமதமற்ற விசாரணை
அதே சமயம், தொடர்ந்து தாமதிக்காமல் குறுக்கு விசாரணை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்று எனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவிடுகிறேன் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications