குஜராத்தில் கரையை கடந்த அதிதீவிர புயல் டவ்-தே புயல்- வலுவிழந்து டையூ அருகே மையம் கொண்டுள்ளது!
போர்பந்தர்: அரபிக் கடலில் உருவான டவ்-தே அதிதீவிர புயலானது நேற்று இரவு 8.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியில் கரையை கடந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது வலுவிழந்து தீவிர புயலாக டையூ அருகே நிலை கொண்டுள்ளது.
அரபிக் கடலில் லட்சத்தீவுகள் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது அதிதீவிர புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு டவ்-தே என பெயரிடப்பட்டிருந்தது.
டவ்-தே புயல் உருவானது முதலே கேரளாவில் கனமழை கொட்டித் தீர்த்தது. கேரளாவில் பல பகுதிகளில் கடல்நீர் கொந்தளிப்புடன் வீடுகளுக்குள் நுழைந்தது. கேரளாவின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாகின. இதேபோல் கர்நாடகாவின் 200க்கும் மேற்பட்ட கடலோர கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கர்நாடகாவின் டவ்-தே புயலின் கோரதாண்டவத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர்.

மகாராஷ்டிராவில் பாதிப்பு
டவ்-தே புயலானது அரபிக் கடலில் நகர்ந்து குஜராத்தை நோக்கி சென்றது. இதனால் மகாராஷ்டிரா மாநிலமும் மிக கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது. மும்பையில் நேற்று பலத்த காற்று வீசியதால் விமான சேவைகள் பகல் முழுவதும் ரத்து செய்யப்பட்டன. மகாராஷ்டிராவில் புயலில் சிக்கி 8 பேர் பலியாகினர்.

திங்கள்கிழமை இரவு கரையை கடந்தது
குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியில் டையூவுக்கு இடையே நேற்று இரவு 8.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கியது டவ்-தே புயல். இன்று அதிகாலை 2.30 மணியளவில் டவ்-தே புயல் முழுமையாக் கரையை கடந்ததாக வானிலை மையம் அறிவித்தது.

மின்சாரம், செல்போன் சேவைகள் பாதிப்பு
இந்த புயல் கரையை கடந்த போது மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் குஜரத்தின் கடலோர பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. செல்போன் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. டவ்-தே புயல் கரையை கடப்பதற்கு முன்னதாகவே குஜராத்தில் சுமார் 2 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் ஏற்கனவே தேசியர் பேரிடர் மீட்பு குழுக்களும் முகாமிட்டிருந்தன.

வலுவிழந்த நிலையில்..
தற்போதைய நிலையில் டவ்-தே புயல் வலுவிழந்து தீவிர புயல் என்ற நிலையில் டையூ அருகே 30 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications