மேதி பிஸ்வாஸ் கைது... பெங்களூர் போலீசுக்கு டுவிட்டரில் ஐ.எஸ்.ஐ.எஸ். கொலை மிரட்டல்
பெங்களூரு: பெங்களூருவில் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு ஆதரவாக ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டதாக மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்ற இளைஞர் கைது செய்யப் பட்டிருப்பதற்கு அந்த இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என போலீசாருக்கு டுவிட்டர் வாயிலாக மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது.

பெங்களூரு எம்.என்.சி. நிறுவனம் ஒன்றில் மேதி பிஸ்வாஸ் என்ற பொறியியல் பட்டதாரி, டுவிட்டர் மூலமாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் வேலை பார்த்து வந்ததாக பிரிட்டன் சேனல் ஒன்று செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் மேதியை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். மேதியை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூரு குற்றப்பிரிவு இணை ஆணையர் ஹேமந்த் நிம்பல்கர் மற்றும் துணை ஆணையர் அபிஷேக் கோயலுக்கு டுவிட்டரில் ஒரு மிரட்டல் செய்தி அனுப்பப் பட்டுள்ளது. அதில், ‘எங்கள் சகோதரரை உங்களிடம் விட முடியாது. பழிக்கு பழி செயல் விரைவில் வந்து கொண்டிருக்கிறது. இதற்கான விளைவை சந்திக்க வேண்டியது இருக்கும்' எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த மிரட்டல் பதிவைத் தொடர்ந்து பெங்களூரு போலீசார் உஷார் படுத்தப் பட்டுள்ளனர்.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை!












Click it and Unblock the Notifications