இந்த சின்னம்மாவை மறந்துடாதீங்க தெலுங்கானா புள்ளைகளா: சுஷ்மா ஸ்வராஜ்
டெல்லி: தெலுங்கானா தனிமாநிலம் ஆக சோனியா அம்மா மட்டும் அல்ல இந்த சின்னம்மாவும் தான் காரணம் என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனிமாநிலம் ஆகப் போகிறது. இது குறித்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் முயற்சியாலேயே தெலுங்கானா தனிமாநிலமாக்கப்படுகிறது. என்ன ஆனாலும் சரி ஆந்திரா இரண்டாக பிரிக்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
தெலுங்கானா தனி மாநிலமாக்கப்பட்டால் சீமாந்திராவில் காங்கிரஸ் காணாமல் போய்விடும் என்று எச்சரிக்கப்பட்டதால் ஆந்திராவை பிரிக்க காங்கிரஸ் காலதாமதம் செய்தது. கடந்த 2004ம் ஆண்டு ஆந்திர மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட சோனியா தெலுங்கானா தனி மாநிலமாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அவர் தனது வாக்குறுதியை 10 ஆண்டுகள் கழித்து நிறைவேற்றியுள்ளார்.
இந்நிலையில் தெலுங்கானா மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில்,
தெலுங்கானா குழந்தைகளுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு தனி மாநிலம் கிடைக்க சோனியா அம்மா மட்டும் அல்ல இந்த சின்னம்மாவும் தான் காரணம் ஆகும் என்றார்.
அவர் சின்னம்மா என்று தன்னைத் தானே தெரிவித்துள்ளார்.
-
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications