காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்கள் எண்ணிக்கை 18-ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: சிகிச்சை பலனின்றி, ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததால் காஷ்மீர் மாநிலம் யூரியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் யூரி பகுதி எல்லை வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள் நேற்று அதிகாலை 4 மணிக்கு யூரி ராணுவ முகாமை தாக்கினார்கள். அவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் நடத்திய தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். 19 வீரர்கள் காயம் அடைந்தனர்.

Death toll rises to 18 in the UriAttacks

இந்த தாக்குதலை உணர்ந்து கொண்ட ராணுவ வீரர்கள் பதிலடி தரும் வகையில் துப்பாக்கியால் சுட்டார்கள். இதில் 4 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. இந்நிலையில், ஆர்.ஆர்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிப்பாய், கே.விகாஷ் ஜனார்த்தன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ராணுவம் அறிவித்துள்ளது.

இதன்மூலம், வீர மரணமடைந்த ராணுவ வீரர்கள் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது. ராணுவ வீரர்கள் மறைவுக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உட்பட பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+