அமித்ஷா அன்று சந்தித்தாரே சாமியார்.. இன்று மீண்டும் மத்திய அரசுக்கு புது கோரிக்கை.. கெடு விதிப்பு
உபி மடாதிபதி புதுவித கோரிக்கையை மத்திய அரசுக்கு விடுத்துள்ளார்
கான்பூர்: இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க வேண்டும், இல்லாவிட்டால் ஜலசமாதி அடைந்துவிடுவேன் என்று ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் தேசியக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் நிறைய மடங்கள் உள்ளன.. இந்த மடங்களில் மடாதிபதிகளும் உள்ளனர்.. இந்த மடாதிபதிகளை உபி மக்கள் மிகவும் மதித்து போற்றி வருகின்றனர்.. இவர்கள் செல்வாக்கு மிக்கவர்களாகவும் மிகுந்த சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள்..
அதனால்தான், கொரோனா தொற்று 2வது அலையின்போது கும்பமேளாவை நிறுத்த எத்தனையோ முயற்சிகளை அந்த மாநிலம் மேற்கொண்டது.. ஆனால், மடாதிபதிகளை மீறி எதுவுமே செய்ய முடியாமல் போனது.. விளைவு அங்கு தொற்றும் அதிகமானது என்பது வேறு கதை.

அறிவிப்பு
இந்நிலையில்தான், அங்குள்ள மடாதிபதிகளில் மிக முக்கியமானவராக கருதப்படும் ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ் என்பவர் புதுவித அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. அதில், இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்காவிட்டால் ஜலசமாதி அடையப்போவதாக எச்சரித்துள்ளார்.. இதற்காக அவர். அயோத்தியின் ராம் ஜானகி கோவிலின் முன்பு உட்கார்ந்து இப்படி ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்.

பேட்டி
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், "வரும் அக்டோபர் 2ம் தேதிக்குள் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அதாவது இந்து தேசமாக அறிவிக்க வேண்டும்... அப்படி இல்லாவிட்டால் நான் சரயு நதியில் ஜல சமாதி அடைவேன்... பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் தேசியக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

அமித்ஷா
இப்படி இவர் எச்சரிப்பது முதல் தடவையில்லை.. ஏற்கனவே இதே கோரிக்கையை வைத்துதான் 15 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.. பிறகு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கையில் எடுத்தார்.. அப்போதுதான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவரை நேரில் சந்தித்தார்.. அதற்கு பிறகு உண்ணாவிரதத்தை கைவிட்டார்.. இப்போது மறுபடியும் எச்சரித்து, கெடு விதித்துள்ளார்.

சாமியார்
3 வருடங்களுக்கு முன்பு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் நடத்தினார்.. அப்போதுதான் இவர் ஓரளவு பிரபலமானார்.. இதற்கு இதன்மூலம், சற்று பிரபலமான இந்த சாமியார் கடந்த ஆண்டு மறுபடியும் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்.. இப்போது மீண்டும் ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளார்.

பரபரப்பு
உத்தரப்பிரதேசத்துக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது.. இந்த முறையாவது உபியை கைப்பற்ற காங்கிரஸ் முயன்று வருகிறது.. இந்த முறையும் உபியை விட்டுவிடக்கூடாது என்று பாஜக முயன்று வருகிறது. இப்படி பிரதான கட்சிகள் படுபிஸியில் இயங்கி கொண்டிருக்கும்போது, ஜீயர் தந்த இந்த பரபரப்பு பேட்டி முக்கியத்துவம் பெற்று வருகிறது.. காரணம், உபி தேர்தலில் மடாதிபதிகளின் ஆதரவும் கட்சிக்கு முக்கியம் என்று கருதப்படுகிறது..!
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications