பதன்கோட் தாக்குதல்: லெப். கர்னல் உள்பட மேலும் 4 பாதுகாப்புப் படையினர் மரணம்
டெல்லி: பதன்கோட் தீவிரவாதத் தாக்குதலில் இன்று மேலும் 4 பாதுகாப்புப் படையினர் மரணமடைந்தனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 7 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படைத் தளத்தை நேற்று பாகிஸ்தானிலிருந்த ஊடுறுவி வந்த ஐந்து தீவிரவாதிகள் தாக்கினர். அவர்களைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மோதலில் ஐந்து தீவிரவாதிகளையும் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவத்தில் நேற்று 3 பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்தனர். பலர் காயமடைந்திருந்தனர்.

இந்த நிலையில் விமானப்படைத் தளத்தில் வெடிகுண்டுகள் இருக்கிறதா என்ற சோதனையில் இன்று பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தபோது கிரெனட் குண்டுகள் வெடித்து 4 வீரர்கள் காயமடைந்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பாதுகாப்புப் படையினரில் நான்கு பேர் இன்று அடுத்தடுத்து மரணமடைந்தனர். அவர்களில் ஒருவர் தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த லெப்டினென்ட் கர்னல் ஆவார். பாதுகாப்புத்துறை இந்தத் தாக்குதலை வெளியிட்டுள்ளது.
மற்றவர்களில் ஒருவர் விமானப்படையைச் சேர்ந்தவர் என்றும், மற்றவர்கள் ராணுவத்தினர் என்றும் தெரிய வந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications