டெல்லியில் பயங்கரம்: பெண் பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் காரிலிருந்து வெளியே வீசப்பட்ட கொடூரம்!
டெல்லி: டெல்லியில் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி-டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் பார்லா என்ற இடம் அருகே 25 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

உடல் முழுவதும் காயங்கள் இருப்பதால் அந்த பெண்ணை யாரெனும் மர்ம நபர்கள் கற்பழித்து ஒடும் காரில் இருந்து தூக்கி வீசியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண் டெல்லி சலீம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு நினைவு திரும்பிய உடன், அவரிடம் இருந்து வாக்குமூலம் பெறப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அதன் பிறகே மற்றவிவரங்கள் தெரியவரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதி இரவு தனது நண்பருடன் பேருந்தில் சென்ற மருத்துவ மாணவி நிர்பயா, 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப் பட்டார். பின்னர், சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவி, டிசம்பர் 29-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.
நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பு குறித்த பிரச்சாரம் தீவிரமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications