டெல்லியில் புதிய ஆட்சி அமைப்பதில் கால தாமதம் ஏன்?: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
டெல்லி: டெல்லியில் புதிய ஆட்சி அமைவது தொடர்பாக முடிவெடுப்பதில் கால தாமதம் செய்வது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி சட்டசபையைக் கலைத்து, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது டெல்லியில் பெரும்பான்மை பலம் கொண்ட கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கலாம் என்ற துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கின் பரிந்துரைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் ஒப்புதல் கடிதத்தின் நகலை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் வழங்கினார். அப்போது மத்திய அரசுக்கு நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.ஜனநாயக நாட்டில் பல மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், துணை நிலை ஆளுநர் இந்த விவகாரத்தில் 5 மாதங்களாக முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியது ஏன் என கேள்வி எழுப்பினர்.
போதிய கால அவகாசம் இருந்தும், வழக்கு விசாரணையின் போது மட்டுமே மத்திய அரசு புதிய அரசு குறித்த முடிவை அறிவிப்பது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆம் ஆத்மி தொடர்ந்த வழக்கின், முகாந்திரத்தை கருத்தில் கொண்டு அதை மேற்கொண்டு விசாரிப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தனர்.
டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு பதவி விலகியதை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி முதல் அங்கு ஜனாதிபதி தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications