தேர்தலில் சீட் கிடைக்காததால் விரக்தியில் கட்சி வெப்சைட்டை மூடி விட்டுப் போன காங். தலைவர்
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத கோபத்தில் டெல்லி மாநில காங்கிரஸ் கட்சியின் வெப்சைட்டையே மூடி விட்டார் ஒரு காங்கிரஸ் தலைவர்.
மேலும் தனக்கு கட்சி சீட் தரவில்லை என்பதையும் அதில் அவர் சொல்லியுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.
அந்த தலைவரின் பெயர் சஞ்சய் பூரி. டெல்லியைச் சேர்ந்த இவர் 30 வருடத்திற்கு முன்பு காங்கிரஸில் இணைந்து செயல்பட்டு வந்தார்.

சீட் கிடைக்கலை பாவம்:
பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெறும் டெல்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டிருந்தார் பூரி. ஆனால் சீட் கிடைக்கவில்லை.
கடும் அதிர்ச்சியில் காங்கிரஸ்:
இந்த நிலையில் டெல்லி மாநில காங்கிரஸ் இணையதளத்தையும், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சந்தேஷின் இணையதளத்தையும் இவர் முடக்கி வி்ட்டார். இதனால் காங்கிரஸ் கட்சி கடும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்துள்ளது.
கட்சி செய்த துரோகம்:
இதுகுறித்து பூரி கூறுகையில், "நான்தான் இந்த இணையதளங்களைத் தொடங்கினேன். இத்தனை காலமாக நான்தான் இதை பராமரித்து வந்தேன். எனக்கு கட்சி துரோகம் செய்து விட்டது. பிறகு எதற்கு இந்த இணையதளங்களை நான் நடத்த வேண்டும். அதனால்தான் மூடி விட்டேன்" என்று கூறியுள்ளார் பூரி.
இரண்டு இணையதளங்கள்:
dpcc.co.in மற்றும் congresssandesh.com ஆகிய இணையதளங்களைத்தான் பூரி மூடியுள்ளார். அதில் அசவுகரியத்திற்கு மன்னிக்கவும். இந்த இணயதளம், திரு சஞ்சய் பூரி என்பவரால் கடந்த 2008 ஆம் ஆண்டு வடிவமைத்து, உருவாக்கி பராமரிக்கப்பட்டு வந்தது.
மூடப்படும் இணையதளம்:
சஞ்சய் பூரி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஜனவரி 19 ஆம் தேதி 2015 ஆம் ஆண்டுடன் விலகி விட்டார். இதனால் இந்த இணையதளம் மூடப்படுகிறது என்று போட்டு வைத்துள்ளார் பூரி.
சின்னாபின்னமாகிய காங்கிரஸ்:
ஏற்கனவே டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜகவுக்கு இடையே சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது காங்கிரஸ். இந்த நிலையில் பூரி, கட்சி இணையதளத்தையே மூடி விட்டார். இதனால் காங்கிரஸார் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சுயேச்சையாக போட்டி:
இந்த பரபரப்புக்கு மத்தியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பூரி சந்தித்துப் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், அவர் ஜனக்புரி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
மாமனும், மருமகனும்:
இத்தொகுதியில் பாஜக சார்பில் ஜெகதீஷ் முக்கி என்பவர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முக்கியின் மருமகன் சுரேஷ் குமாரை நிறுத்துகிறது என்பபது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications