மதுபானக் கடைகளில் 'வெங்காயம், உருளைக் கிழங்கு' விற்க டெல்லி அரசு 'பகீர்' ப்ளான்!
டெல்லி: மதுபானக் கடைகளில் வெங்காயம், உருளைக் கிழங்கு விற்பனை செய்வதற்கு டெல்லி அரசு திட்டமிட்டு வருவதாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு பெண்கள் அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

70 நடமாடும் வேன்கள்
இதன் ஒருபகுதியாக டெல்லி அரசும் 70 நடமாடும் மலிவு விலை காய்கறி வேன்கள் மூலம் 250 பகுதிகளில் நாள்தோறும் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளை மொத்த விலைக்கே விற்பனை செய்து வருகிறது.

நியாயவிலைக் கடைகள்
மேலும் 288 நியாய விலக்கடைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான 70 அலுவலகங்களில் ஒரு கிலோ வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவை 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

குடிநீர் வாரிய அலுவலகங்கள்
இதன் விரிவாக்கமாக குடிநீர் வழங்கும் வாரிய அலுவலக வளாகங்களையும் காய்கறி கடைகளாக மாற்ற டெல்லி அரசு முடிவு செய்தது.

மதுபானக் கடைகளிலும் தான்..
அத்துடன் விட்டாலும் பரவாயில்லை.. டெல்லியில் அனைத்து மதுபான கடைகளிலும் கூட வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை விற்கவும் டெல்லி அரசு முடிவு செய்துள்ளதாம்.

சரக்கு கடைகளில் பெண்கள் கியூ
இதனால் தலைநகர் டெல்லியில் இனி பெண்கள் சரக்கு கடைகளில் நீண்ட வரிசைகளில் நிற்பதை காண முடியும். டெல்லி அரசின் முடிவுக்கு இப்போதே பெண்கள் அமைப்புகள் போர்க்கொடியும் தூக்க தொடங்கிவிட்டன.

மதுவிற்பனையே காரணம்
ஏற்கெனவே பலாத்காரங்களின் தலைநகர் என்று பெயர் "வாங்கி' வைத்திருக்கும் டெல்லியில் மதுபானக் கடைகளுக்கே பெண்களை போகச் செல்லும் டெல்லி அரசின் முடிவு மிக மோசமான விபரீதங்களையும் ஏற்படுத்தும் என்றும் பெண்கள் அமைப்புகள் எச்சரித்துள்ளன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications