ஃபேஸ்புக் தோழியுடன் காதலர் தினத்தை கொண்டாட சென்ற இடத்தில் வாலிபர் கொலை
டெல்லி: டெல்லியைச் சேர்ந்த வாலிபர் ஃபேஸ்புக் தோழியுடன் காதலர் தினத்தை கொண்டாட குர்காவ்ன் சென்றபோது இரண்டு பேரால் அடித்து மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்தவர் ஈஷ்வர்(27). அவருக்கு குர்காவ்னைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களாக அவர் ஃபேஸ்புக் மூலம் அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் காதலர் தினத்தை அந்த பெண்ணுடன் அவரது ஊரில் கொண்டாட முடிவு செய்தார்.

இதையடுத்து அவர் நேற்று மாலை குர்காவ்னுக்கு சென்றுள்ளார். மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்து ஈஷ்வரை அந்த பெண் சுஷாந்த் லோக் பகுதியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
தனது அபார்ட்மென்ட்டில் அந்த பெண் ஈஷ்வருடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரது சகோதரியின் கணவர் ரமேஷ்(30) மற்றும் அவரது டிரைவர் அனில் குமார்(25) ஆகியோர் அங்கு வந்துள்ளனர்.
அந்த பெண்ணும், ஈஷ்வரும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த ரமேஷ் ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து அவரும், அனிலும் சேர்ந்து ஈஷ்வரை அடித்து நொறுக்கி பால்கனியில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதில் ஈஷ்வர் இறக்கவில்லை என்பதை அறிந்த ரமேஷ் அவரை காரில் ஏற்றிக் கொண்டு சென்று நெடுஞ்சாலையோரம் அவரை போட்டுவிட்டு சென்றுவிட்டார். அவ்வாறு செய்தால் ஈஷ்வர் விபத்தில் இறந்தது போன்று தெரியும் என்று செய்துள்ளார்.
அந்த வழியாக சென்றவர்கள் ஈஷ்வரை இரவு 9 மணி அளவில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இரவு 1 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரமேஷ் மற்றும் அனிலை கைது செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications