டெல்லி மெட்ரோ ரயில் நிலைய அறைகள், கழிவறைகளை ஜோடிகளுக்கு வாடகைக்கு விடும் ஊழியர்கள்
டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் பணம் வாங்கிக் கொண்டு ஜோடிகளை அறைகள், கழிவறைகளில் நேரம் செலவிட அனுமதிப்பதை பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளிகள் பணம் வாங்கிக் கொண்டு ஜோடிகளை அறைகள், கழிவறைகளில் நேரம் செலவிட அனுமதிப்பது குறித்த தகவல் பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அந்த சேனலின் செய்தியாளர் மெட்ரோ ரயில் நிலைத்திற்கு சென்று துப்புரவுத் தொழிலாளி ஒருவரிடம் தானும், தனுத பெண் நண்பரும் நேரம் செலவிட ஒரு அறை வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த ஊழியர் ரூ.500 கேட்டுள்ளார். ரூ.300 முதல் ரூ.500 வரை அளித்தால் ஜோடிகள் தனிமையில் ஒரு மணிநேரம் இருக்க அனுமதிக்கப்படுகிறார்களாம்.
இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு இது குறித்து டெல்லி மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரி அனுஜ் தயால் கூறுகையில்,
தொலைக்காட்சி சேனலில் வெளியான விவகாரம் குறித்த சிடி எங்கள் நிறுவனத்தின் தலைமை பாதுாப்பு கமிஷனிரடம் அளிக்கப்பட்டுள்ளது. யாராவது தவறு செய்தது உறுதியானால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லி மெட்ரோ ரயில் நிலைய கழிவறைகள் தனியார் நிறுவனங்களால் பராமரிக்கப்படுகிறது என்றார்.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் டெல்லி மெட்ரோ ரயிலில் ஜோடிகள் மிகவும் நெருக்கமாக இருந்த வீடியோ லீக்காகி அது ஆபாச பட இணையதளத்தில் வெளியானது. லீக்கான சிசிடிவி வீடியோவை 1.5 லட்சம் பேர் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications