டெல்லி மர்ம மரணம்.. குடும்பத்தில் உயிரோடு இருக்கும் ஒரே பெண்.. பரபரப்பு பேட்டி!
டெல்லியில் 11 பேர் மர்மமாக இறந்த விஷயத்தில் புதிய திருப்பமாக அந்த குடும்பத்தில் கடைசியாக உயிரோடு இருக்கும் பெண் ஒருவர் தன் குடும்பம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: டெல்லியில் 11 பேர் மர்மமாக இறந்த விஷயத்தில் புதிய திருப்பமாக அந்த குடும்பத்தில் கடைசியாக உயிரோடு இருக்கும் பெண் ஒருவர் தன் குடும்பம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.
டெல்லி புராரி பகுதியில் நேற்று ஒரு வீட்டிலிருந்து 11 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டது. அந்த வீட்டில் போலீஸ் விசாரணையில் நிறைய கடிதங்கள், டைரிக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
எப்படி தற்கொலை செய்தால் மோட்சம் கிடைக்கும் என்று குறிப்புகள் உள்ளது. எதோ ஒரு மத சடங்கிற்காக இவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை வைத்து போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது.

பெண்
இதில் நிர்மலா தேவி என்ற 77 வயது பெண்ணும் தற்கொலை செய்துள்ளார். இந்த நிலையில் அவரின் மகள் சுஜாதா தற்போது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இவர் மட்டும்தான் தற்போது இந்த குடும்பத்தில் உயிரோடு இருக்கும் நபர் ஆவார். வேலை விஷயமாக இவர் பல நாட்களாக குடும்ப உறுப்பினர்களோடு இல்லாமல் இருந்துள்ளார்.

தற்கொலை இல்லை
இந்த நிலையில் இவர் தனது குடும்பம் குறித்து கூறியதில் ''என்னுடைய குடும்பம் தற்கொலை செய்ய கூடியது அல்ல. எங்கள் வீட்டில் யாருக்கும் அவ்வளவு மோசமான மூட நம்பிக்கை இல்லை. இவர்களை யாரும் ஏமாற்றவில்லை. ஆனால் யாரோ இவர்களை கொலை செய்து இருக்கிறார்கள். போலீஸ் அவர்களை கைது செய்ய வேண்டும்'' என்றுள்ளார்.

பிரேத பரிசோதனை முடிவு
இந்த மர்ம மரணத்தில் 6 பேரின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டு, தற்போது பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி இவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று கூறியுள்ளனர். ஆனால் முழுமையாக பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகவில்லை. இவர்கள் தற்கொலை செய்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்று போலீஸ் கூறுகிறது.

மர்மமோ மர்மம்
இதில் இன்னொரு விதமான பார்வையும் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த குடும்பத்தில் இருந்த புராரியின் தந்தை சில வருடங்களுக்கு முன் மரணம் அடைந்துள்ளார். அவர் இவர்களின் கனவில் வந்து இப்படி தற்கொலை செய்ய சொன்னதாக கூறப்படுகிறது. புராரிக்கு இறந்து போன அப்பா அடிக்கடி பேசுவது கேட்பதாக புகார் அளித்து இருந்தார் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications