டெல்லியில் மூன்றாம் வகுப்பு மாணவன் கழுத்தறுத்து கொடூர கொலை.. பிளஸ் 1 மாணவன் கைது
டெல்லியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டதில் தற்போது துப்பு துலங்கி இருக்கிறது.
Recommended Video

டெல்லி: டெல்லியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டான். சில நாட்களுக்கு முன் கழுத்தறுக்கப்பட்டு மரணம் அடைந்த அந்த சிறுவனின் பெயர் பிரத்தியுமான் தாக்குர்.
தனியார் பள்ளியில் நடந்த இந்த கொலையில் முதலில் அந்த பள்ளியின் பஸ் கண்டெக்டர் கைது செய்யப்பட்டார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
ஆனால் தற்போது அந்த கொலையில் அதே பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் ஒருவனுக்கும் தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அந்த மாணவனும் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறான்.

பள்ளி கழிவறையில் கொலை
டெல்லியின் குர்கான் பகுதியில் இருக்கும் ரேயான் இண்டர்நேஷனல் பள்ளியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த சம்பவம் நடந்தது. அந்த பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய சென்ற பணியாளர் அங்கு பிரத்தியுமான் தாக்குர் என்ற மாணவன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து இருக்கிறார். போலீஸ் வந்து அவரது உடலை சோதனை செய்கையில் அந்த சிறுவன் அங்கேயே கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

நாடகம் ஆடிய பஸ் கண்டெக்டர்
இதையடுத்து போலீசார் அந்த கொலை குறித்து விசாரணை செய்தனர். அந்த சிறுவன் அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த போது அந்த பள்ளியின் பஸ் கண்டெக்டர் வந்து அவசர அவசரமாக தூக்கி காரில் வைத்து மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். ஆனால் போலீஸ் இவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்ததில் இவர்தான் கொலையாளி என்பது தெரிய வந்து இருக்கிறது.

சிசிடிவியால் துப்பு துலங்கியது
மேலும் போலீசார் அந்த பள்ளியின் சிசிடிவி கேமராவை சோதனை செய்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட அந்த மாணவன் பாதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கழிவறையில் இருந்து வெளியே வந்தது தெரிய வந்து இருக்கிறது. மேலும் அந்த வீடியோவில் பஸ் கண்டெக்டர் அந்த சிறுவனை கொடூரமாக உள்ளே இழுத்து சென்றதும் பதிவாகி இருக்கிறது. இதையடுத்து அந்த கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.

பிரேத பரிசோதனை முடிவுகள்
இந்த நிலையில் அந்த சிறுவனின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகி இருக்கிறது. அதில் அந்த சிறுவன் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அந்த சிறுவன் கழுத்து அறுக்கப்பட்ட 2 நிமிடத்தில் மரணம் அடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பள்ளி மாணவனும் சம்பந்தம்
இந்த கொலையில் தற்போது புதிய திருப்பம் ஒன்று உருவாக்கி இருக்கிறது. அதன்படி இந்த கொலைக்கு அதே பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவனும் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவனும் அந்த மாணவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கிறான். சிசிடிவி கேமராவில் இந்த சிறுவன் தப்பித்தது எப்படி என விசாரணை நடைபெறுகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications