மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு.. டெல்லி பல்கலை பேராசிரியருக்கு ஆயுள் தண்டனை
டெல்லி பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்சிரோலி செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி: மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்த டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவுக்கு கட்சிரோலி செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி பல்கலை கழகத்தை சேர்ந்த ராம் லால் ஆனந்த் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக இருந்தவர் ஜி.என். சாய்பாபா. இவர் தடை செய்யப்பட்ட மவோயிஸ்ட் அமைப்பினருடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதனை அடுத்து கடந்த 2014ம் ஆண்டு மே மாதத்தில் கட்சிரோலி போலீசார், பல்கலை கழகத்தில் அமைந்துள்ள அவரது அலுவலக இல்லத்தில் வைத்து சாய்பாபாவை கைது செய்தனர். இதனை தொடர்ந்து பல்கலை கழகத்தில் இருந்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கட்சிரோலி செசன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில், சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்த குற்றத்திற்காக ஜவஹர்லால் பல்கலை கழக மாணவர் ஹேம் மிஷ்ரா, முன்னாள் பத்திரிக்கையாளரான பிரசாந்த் ராஹி மற்றும் 3 பேருக்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications