ரூபாய் நோட்டு அறிவிப்பு துணிச்சலானது.. பிரச்சனை விரைவில் தீரும்: அருண் ஜேட்லி
டெல்லி: ரூபாய் நோட்டு பற்றிய அறிவிப்பு துணிச்சலானது என்று பாராட்டியுள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இது ஒரு நல்ல தொடக்கம் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற இந்திய தொழில், வர்த்தக சபை ஆண்டு விழா கூட்டத்தில் அருண் ஜேட்லி பேசுகையில் , ரூபாய் நோட்டு அறிவிப்பு ஒரு நல்ல தொடக்கம், இது முன்கூட்டியே செய்திருக்கப்பட வேண்டியது. ரூபாய் தட்டுப்பாடு நீங்க ரொம்ப காலம் பிடிக்காது.

இந்திய பொருளாதாரம் சவால்கள் நடுவே துடிப்போடு உள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகிச் செல்ல விரும்பி வாக்களிக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இதனால் உலக அளவில் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மேலும், ஜிஎஸ்டி வரி விதிப்பு சட்ட திருத்தம் சுமூகமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களுடனான ஆலோசனைக்கு பிறகு சுமார் 10 திருத்தங்கள் செய்துள்ளோம். பிரச்சினைகள் இன்றி பெரும்பாலான மாநில சட்டசபைகளில் இந்த சட்டம் நிறைவேற வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications