யாகூப் மேமன் தூக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியை ராஜினாமா செய்தாரா சுப்ரீம்கோர்ட் துணை பதிவாளர்?
டெல்லி: உச்சநீதிமன்ற துணை பதிவாளர் (ஆய்வு) டாக்டர். அனுப் சுரேந்திரநாத் ராஜினாமா செய்ததற்கும் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதற்கும் சம்மந்தம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
உச்சநீதிமன்ற துணை பதிவாளராக (ஆய்வு) பதவி வகித்தவர், அனுப் சுரேந்திரநாத். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "சுப்ரீம் கோர்ட்டின் இருண்ட மணித்துளிகள்" என்று ஒரு நிலைத்தகவலை கடந்த 30ம் தேதி போட்டிருந்தார். மேலும் தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.

இந்த இரு நிகழ்வுகளையும், ஒப்பிட்டு பார்த்த ஊடகங்கள் சில, மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி, யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கான உத்தரவை நள்ளிரவில் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்ததைதான் இருண்ட மணித்துளிகள் என அனுப் சுரேந்திரநாத் குறிப்பிட்டுள்ளார், இதன் காரணமாகவே அதிருப்தியில் ராஜினாமா செய்துள்ளார் என்று செய்தி வெளியிட்டன.
ஆங்கில பத்திரிகையொன்று, அனுப் சுரேந்திரநாத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, "ராஜினாமாவுக்கான காரணத்தை சொல்ல முடியாது" என்று தெரிவித்திருந்தார்.
Now SC Registry says Anup Surendranath didn't resign but repatriated; resignation didn't mention Yakub@IndianExpress pic.twitter.com/wakPEwfCIS
— Utkarsh Anand (@utkarsh_aanand) August 2, 2015 இந்நிலையில், உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் பின்வரும் வாசகங்கள் உள்ளன: டெல்லி சட்ட பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் பணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையின்பேரில் டாக்டர் சுரேந்திரநாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரேந்திரநாத், அளித்துள்ள ராஜினாமா கடிதத்திலும், யாகூப் மேமன் குறித்த ஒரு வார்த்தையும் இடம்பெறவில்லை. தூக்கு தண்டனை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுவரும் சுரேந்திரநாத், டெல்லி பல்கலையில் அந்த ஆய்வுகளை மேற்கொள்ளவே திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications