Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முகத்தில் டென்ஷன்.. சூழ்ந்த போலீஸ்.. அயோத்தியில் நடிகர் தனுஷ் அவசரமாக வெளியேறியது ஏன்

Subscribe to Oneindia Tamil

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட நடிகர் தனுஷை ரசிகர்கள் கும்பலாக சூழந்து கொண்டதால் கூட்ட நெரிசலில் சிக்கும் நிலை ஏற்பட்டது. முகத்தில் டென்ஷனும் போலீஸ் பாதுகாப்புடன் தனுஷ் இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் கோவில் கட்ட உச்ச் நீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு அனுமதி அளித்தது. இதையடுத்து, ராமர் கோவில் கட்டும் பணிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கியது. மூன்று ஆண்டுகளாக முழு வீச்சில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்றன. இரும்பு பொருட்கள் எதுவும் இன்றி வெறும் கற்களை கொண்டே இந்த கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டது.

Dhanush mobbed by eager fans as he leave the ceremony in Ayodhya Ram Temple

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும் வகையில் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்றன. நாகரா பாணியில் கட்டப்பட்ட கோவில் வளாகம், 380 அடி நீளம், 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்ட இந்த கோவில் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது ஆகும். மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களுடன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவிலில் 5 வயது பால ராமர் சிலை என்பது கடந்த 18 ம் தேதி நிறுவப்பட்டது. இதையடுத்து இன்று கோவிலில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் 12.15 மணிக்கு தொடங்கிய பிரான் பிரதிஷ்டை சடங்குகள் 12.45 மணி வரை நடந்தது. பிரதமர் முன்னின்று ராமர் சிலை பிரதிஷ்டை செய்தார்.

Dhanush mobbed by eager fans as he leave the ceremony in Ayodhya Ram Temple

ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பாலராமர் சிலை முன்பாக கண்களை மூடி மனமுருகி பிரதமர் மோடி வழிபாடு செய்தார். இதன் பின்னர் ராமர் சிலைக்கு தீப ஆராதனையும் காட்டினார். ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் முக்கிய பிரமுகர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. திரையுலக நட்சத்திரங்கள் கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமான விவிஐபிக்கள் அயோத்தி வந்தனர். ரஜினி, தனுஷ், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஆயுஷ்மான் குர்ரானா, தெலுங்கில் பவன் கல்யாண், சிரஞ்சீவி, ராம் சரண் என பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.

Dhanush mobbed by eager fans as he leave the ceremony in Ayodhya Ram Temple

ராமர் கோவில் விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் அமர தனித்தனி இருக்கைகள் போடப்பட்டு சிறப்பான ஏற்பாடுகள் செயய்ப்பட்டன. கோவிலில் சிலை பிரதிஷ்டை பணிகளை பிரதமர் மோடி முன்னின்று நடத்தினர். நாடு முழுவதும் கும்பாபிஷேக விழா தொலைக்காட்சிகளில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. கோவில் கும்பாபிஷேக விழா முடிந்ததும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் வரிசையாக கிளம்பி சென்றனர்.

திரைப்பிரபலங்களை பார்க்க அயோத்தி மக்களும் ஆர்வமுடன் திரண்டு இருந்தனர். அந்த வகையில், நடிகர் தனுஷ் விழா முடிந்ததும் கிளம்பி சென்றார். அப்போது, அவரைக் காண ரசிகர்கள் முண்டியடித்தனர். தனுஷை ரசிகர்கள் கும்பலாக சூழந்து கொண்டதால் கூட்ட நெரிசலில் சிக்கும் நிலை ஏற்பட்டது. உடனே அங்கிருந்த பாதுகாவலர்கள் தனுஷை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் ஸ்னேஹஸ்லா என்பவர் தனுஷை போலீசார் பாதுகாப்பாக அழைத்து செல்லும் வீடியோ வை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், பிரவுன் நிற குர்தா அணிந்து கொண்டு செல்லும் தனுஷ், விழா முடிந்தததும் தனது காரை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார். அப்போது தனுஷடன் செல்பி எடுக்க முண்டியடித்தனர். ஆனால் தனுஷ் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு செல்ல முயன்றார். போலீசாரும் தனுஷை பத்திரமாக அழைத்து சென்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+