குவியும் தங்கம்..கோடிக்கணக்கில் பணம்..அயோத்தி ராமர் கோவிலில் முதல் மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவு பெற்றுள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர். அவர்கள் காணிக்கை, நன்கொடைகளை வாரி வழங்கி நிலையில் தான் ஒரு மாதத்தில் ராமர் கோவிலுக்கு கிடைத்த தங்க நகை மற்றும் காணிக்கை பணம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அயோத்தி.. 500 ஆண்டாக நீடித்து வந்த சர்ச்சைக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்தது. கடந்த 2019ல் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து 2020ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது.

மொத்தம் 3 அடுக்குகளாக ராமர் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது. தற்போது கோவிலின் முதற்கட்ட பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளன. கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.
கடந்த மாதம் 18 ம் தேதி கோவில் 5 வயது நிரம்பிய பால ராமர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலைக்கு கடந்த மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் கருவறை சென்று சிலைக்கு பிரதமர் மோடி பிரான் பிரதிஷ்டை சடங்குகளை பிரதமர் மோடி செய்தார். அதன்பிறகு ராமர் சிலையின் கண்கள் திறக்கப்பட்டது. கும்பாபிஷேக நாளில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றவர்கள் மட்டுமே தரிசனம் செய்தனர்.
அதன்பிறகு ஜனவரி 23ம் தேதி முதல் பொதுமக்கள் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர். அதிகாலை முதலே கோவிலுக்கு செல்ல பக்தர்கள் திரண்டு வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் கடந்த ஒரு மாதத்தில் அயோத்தி ராமர் கோவிலுக்கு காணிக்கையாக கிடைத்த வருமானம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின் அலுவலக பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறியதாவது: கடந்த மாதம் 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. அதன்பிறகு ஜனவரி 23ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவில் திறந்து ஒருமாதம் ஆன நிலையில் ரூ.25 கோடி வருமானம் கிடைத்துள்ளது. 25 கிலோ தங்கம், வெள்ளி நகைகள், கோவில் அலுவலகத்தில் வழங்கப்பட்ட காசோலை, கோவில் உண்டியல் கிடைத்த காணிக்கை என மொத்தம் ரூ.25 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 60 லட்சம் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து வந்துள்ளனர். இதில் சிறப்பு என்னவென்றால் ராமர் பக்தர்கள் தங்களின் பக்தி காரணமாக கோவிலில் பயன்படுத்த முடியாத வெள்ளி, தங்க நகைகளை பால ராமருக்கு நன்கொடையாக அளிக்கிறார்கள். இந்த நகைகளும் பக்தர்களின் பக்திக்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
மேலும் அயோத்தியில் ராமநவமி பண்டிகை நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிரிக்கும். மேலும் நன்கொடையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ராமர் கோவில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கோவிலில் ரசீதுகள் வழங்க 12 கணினிமயமாக்கப்பட்ட கவுண்ட்டர்கள் செயல்பட்டு வருகின்றன. கூடுதலாக கோவிலில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன'' என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications