நான் நல்லாருக்கேன்.. மனநல சோதனைக்கு மறுத்து டீ, காபி கொடுத்து டாக்டர்களை திருப்பி அனுப்பிய கர்ணன்!
தான் சரியான மனநிலையில் இருப்பதாக மருத்துவ குழுவிடம் கர்ணன் தெரிவித்ததோடு, மனநல பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்து காவல்துறையினரிடம் கைப்பட கடிதம் அளித்தார்.
கொல்கத்தா: நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்ய டாக்டர்கள் குழு அவரது வீட்டுக்கு விரைந்தது. ஆனால் அவர்களை திருப்பியனுப்பிவிட்டார் கர்ணன்.
நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதற்காக உச்சநீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகியுள்ளவர் கொல்கத்தா ஹைகோர்ட் நீதிபதியான கர்ணன்.

நீதிபதிகள் குறித்த பேச்சு, நடவடிக்கையை தொடர்ந்து, கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்ய கடந்த 1ம்தேதி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும், மன நல பரிசோதனை முடிவை வரும் 8ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு பதிலடியாக கர்ணன் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 7 பேருக்குத்தான் மன நல பரிசோதனை செய்ய வேண்டும். எய்ம்ஸ் மன நல மருத்துவர்கள் கொண்ட குழு இந்த சோதனை நடத்த வேண்டும். மேலும் வரும் 5 ம் தேதி எனது கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என உத்தரவில் கூறியிருந்தார். மேலும் இந்த உத்தரவை வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கிறேன் என்றும் நீதிபதி கர்ணன் கூறியுள்ளார்.
மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மனநல பரிசோதனை நடத்த நான் சம்மதிக்க மாட்டேன் என்று கர்ணன் திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று, டாக்டர்கள் குழு இன்று கர்ணன் வீட்டுக்கு சென்றது.. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேற்கு வங்க மாநில டிஜிபி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உரிய வகையில் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
வந்திருந்த மருத்துவர்களுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் காபி, டீ வழங்கி உபசரித்த கர்ணன், மனநல பரிசோதனைக்கு உட்பட முடியாது என கூறி அவர்கள் திருப்பியனுப்பி விட்டார்.
தான் சரியான மனநிலையில் இருப்பதாக மருத்துவ குழுவிடம் கர்ணன் தெரிவித்ததோடு, மனநல பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்து காவல்துறையினரிடம் கைப்பட கடிதம் அளித்தார். நிருபர்களிடம் கர்ணன் கூறுகையில், நீதித்துறையின் தீவிரவாதிகள் என்று, குறிப்பிட்ட 7 நீதிபதிகளை விமர்சனம் செய்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications