சிறுவனை கடித்த வெறி நாயுடன் கட்டிபுரண்டு சண்டை போட்டு காப்பாற்றிய பெண் - வைரல் வீடியோ
சிறுவனை கடித்த நாயுடன் தெருவில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளார் ஒரு பெண், இது பற்றிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Recommended Video

டெல்லி: டெல்லியில் உத்தம் நகர் பகுதியில் தெருவில் உட்கார்ந்திருந்த குழந்தைகளை நாய் ஒன்று விரட்டி கடித்தது, சிறுவனை காப்பாற்ற பெண்கள் தெருவில் நாயுடன் கட்டிப்புரண்டு சண்டை போட்ட வீடியோ காட்சிகள் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வீட்டின் முன்பாக தெருவில் குழந்தைகள் சிலர் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அந்த தெருவில் ஓடி வந்த கருப்பு நிற நாய் ஒன்று அங்கிருந்த குழந்தைகளை விரட்டி கடிக்க ஆரம்பித்தது.

இதில் சில குழந்தைகள் அலறி அடித்துக்கொண்டு தப்பி ஓடினர். ஒரு சிறுவன் மட்டும் கீழே விழுந்து அந்த நாயிடம் மாட்டிக் கொண்டான். அவனை அந்த நாய் கை மற்றும் கால்களை விடாமல் கடித்த படி இருந்தது. அதைப் பார்த்த இளைஞர்கள் சிலர் அந்த சிறுவனை காப்பாற்ற முன்வரவில்லை.
ஆனால் பெண் ஒருவர் தைரியமாக களமிறங்கினார். சிறுவனை காப்பாற்றுவதற்காக நாயிடம் போராடினார். தெருவில் கட்டிப்புரண்டு சண்டை போட்டார். எனினும் சிறுவனை விடாமல் நாய் கடித்த படியே இருந்ததால், இன்னொரு பெண் கையில் கட்டை ஒன்றை எடுத்து வந்து நாயை அடித்து விரட்டினார். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் சேரை எடுத்து நாய் மீது வீசவே, சிறுவனை விட்ட நாய் சேரால் அடித்தவரை விரட்ட ஆரம்பித்தது.
இதில் சிறுவனுக்கும் அவனை காப்பாற்ற போராடிய பெண் உட்பட 3 மூன்று பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியதால், தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்?












Click it and Unblock the Notifications