Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடுமை.. எப்படி தண்டவாளத்தை தாண்டி விழுந்து கிடக்கு பாருங்க.. ஒடிசா ரயில் விபத்தின் ட்ரோன் காட்சி!

Subscribe to Oneindia Tamil

ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடம் கழுகுப்பார்வையில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் சரக்கு ரயில் மீது கோரமண்டல் ரயில் மோதி, அதன் மீது யஸ்வந்த்பூர் ஹவுரா ரயில் மோதி கொடூரமாக காட்சி அளிக்கின்றன. இதயத்தை ரணமாக்கும் இந்த வீடியோவை பாருங்கள்.

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 261 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 650 பேர் படுகாயம் அடைந்தனர் என்று தென்கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 Drone footage of Odisha Train Accident, this is Biggest train accident in two decades

இதனிடையே 288 பேர் இறந்திருப்பார்கள் என்றும் 900க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருப்பார்கள் என்றும் உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் பாலசோர், கோபால்பூர், காந்தபாரா, சோரோ, பாத்ரக் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.

ஹவுரா - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஆகியவை அடுத்தடுத்து மோதி விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து பார்ப்போம்.

விபத்து எப்படி நடந்தது? கொல்கத்தாவின் ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. மாலை சுமார் 6.30 மணி அளவில் பாலசோர் அருகே பஹானாகா பஜார் ஸ்டேஷன் என்ற இடத்தில் சரக்கு ரயில் ஒன்றின் மீது மோதியதில் அதன் சில பெட்டிகள் தடம் புரண்டன. அந்த பெட்டிகளை ரயில்வே ஊழியர்கள் மீட்டு அருகே இருந்த தண்டவாளத்தில் நிறுத்திவைத்திருந்தார்கள்.

அந்த சமயத்தில், அந்த தண்டவாளத்தில் யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்ட பெட்டிகள் மீது பயங்கரமாக மோதியது. இதுவே கொடூரமான விபத்துக்கு காரணமாக அமைந்துவிட்டது.

 Drone footage of Odisha Train Accident, this is Biggest train accident in two decades

இந்நிலையில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாவதை தடுக்கும் கவாச் சிஸ்டமும் கோரமண்டல் ரயிலில் இல்லை. இதேபோல் யஷ்வந்த்பூர் ஹவுரா ரயிலும் இல்லை. விபத்து எப்படி நடந்தது என்பது தீவிர விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் தவறான சிக்னல் கொடுத்ததே விபத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

விபத்து நடந்த ரயில்களில் மீட்பு பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது. பொதுமக்கள் பலரும் மீட்பு பணியில் உதவி செய்தனர். பொதுமக்களே முன் வந்து ரத்ததானம் செய்தனர். ரயில்வே விபத்து குறித்து பிரதமர் மோடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடம் கழுகுப்பார்வையில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் சரக்கு ரயில் மீது கோரமண்டல் ரயில் மோதி, அதன் மீது யஸ்வந்த்பூர் ஹவுரா ரயில் மோதி கொடூரமாக காட்சி அளிக்கின்றன. விபத்து எப்படி நடந்தது என்ற காட்சிகளை அந்த வீடியோ தெளிவாக விவரிக்கிறது. விபத்தில் என்ன நடந்திருக்கும். எத்தனை உயிர்கள் துடித்து போயிருக்கும் என்பது வீடியோவில் உள்ள காட்சிகள் தெரிவிக்கின்றன. கண்களை ஈரம் வரவைக்கும் அதேவேளையில் இதயத்தை ரணமாக்கும் இந்த விபத்து வீடியோ பொதுமக்களை உலுக்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+