ஏர் இந்தியா விமானத்தில் பயணிகள் முன்பு சிறுநீர் கழித்த 'குடி'மகனுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
டெல்லி: டெல்லியில் இருந்து இங்கிலாந்திற்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தின் மையப்பகுதியில் சிறுநீர் கழித்த பயணிக்கு ரூ.97 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று டெல்லியில் இருந்து இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்ஹாம் நகருக்கு சென்றுள்ளது. ஜினு ஆபிரகாம்(39) என்பவர் தனது 10 வயது மகனுடன் விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

அவர் மது அருந்துவிட்டு போதையில் தனது இருக்கையில் இருந்து எழுந்து விமானத்தின் மையப் பகுதிக்கு வந்தார். வந்தவர் அனைத்து பயணிகள் முன்பும் சிறுநீர் கழித்தார். இதையடுத்து சிப்பந்திகள் வந்து அவரை அழைத்துச் செல்ல முயன்றபோது பிடிவாதம் பிடித்தார்.
உடனே சிப்பந்திகள் பிளாஸ்டிக் கைவிலங்கு போட்டு அவரை இருக்கையின் கம்பியோடு கட்டினர். விமானம் தரையிறங்கிய பிறகு ஜினு கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ரூ. 97 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து ஆபிரகாம் கூறுகையில்,
நான் இரண்டு கிளாஸ் விஸ்கி குடித்தேன். மன அழுத்தத்திற்கான மருந்து உட்கொண்டு வரும் எனக்கு விஸ்கி குடித்த பிறகு என்ன நடந்தது என்றே நினைவு இல்லை என்றார்.
ஆபிரகாமின் வழக்கறிஞர் கூறுகையில்,
ஆபிரகாமின் இரண்டாவது குழந்தை இறந்ததில் இருந்து அவர் மன அழுத்தத்திற்கான மருந்துகளை உட்கொள்கிறார். அவரின் மனைவியும் மற்றொரு குழந்தையும் வேறு ஒரு விமானத்தில் பயணம் செய்தனர். விமானத்தில் பயணம் செய்வதை நினைத்து பதட்டமாக இருந்த ஆபிரகாம் தனியாக பயணிக்கும் தனது மனைவியை நினைத்தும் கவலையில் இருந்தார்.
அவர் எடுத்துக் கொண்ட மருந்தில் தான் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விமானத்தில் அவர் சிறுநீர் கழித்ததாகக் கூறியதை கேட்டு அவரே அதிர்ச்சி அடைந்தார் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications