அட தேவுடா.. வீடு வரைக்கும் தாங்காது.. இந்த குடிகாரர் செய்த சேட்டையை பாருங்களேன்!
கோழியை இளைஞர் ஒருவர் உயிருடன் சாப்பிட்டுள்ளார்.
தெலங்கானா: எங்காவது இந்த கன்றாவி நடக்குமா? குடிக்கிறதே தப்பு.. அதையும் ஒரு அளவோடு குடிச்சா என்னவாம்? போதை கண்ணு மறைக்கும்ன்னு சொல்லுவாங்களே.. அது இந்த சம்பவம்தான்போல.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள மாவட்டம் மகபூபாத். இங்கு கேசமுத்ரம் என்ற கிராமம் உள்ளது. இங்கு கிராமத்தை சேர்ந்த இரண்டு பேர் கடைக்கு போய் கோழி வாங்கினர். அப்போது ரெண்டு பேருமே செம போதையில் இருந்துள்ளனர். கோழியை வீட்டுக்கு கொண்டு போய் சைட்-டிஷ்ஷாக சமைத்து சாப்பிடலாம் என்று நினைத்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

வரும் வழியில் இரண்டு பேர்ல ஒருத்தருக்கு பயங்கரமா பசி எடுத்துச்சாம். வீட்டுக்கு போய் கோழியை சுத்தம் செய்து சாப்பிடும் அளவுக்கு அவருக்கு பொறுமை இல்லையாம். 'அதுக்கெல்லாம் லேட் ஆகும், அதுவரைக்கும் பசி தாங்காதுடா சாமி' என்று யோசித்த அவர், நடுவழியிலேயே கோழியின் இறக்கையை பிய்க்க தொடங்கினார்.
ஒவ்வொரு இறக்கையாக அவசர அவசரமாக பிடுங்கி போட்டார். பிறகு கோழியை அப்படியே கடித்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார். நடுநடுவே விக்கல் வரும்போது கோழியின் ரத்தத்தையும் அவர் அப்படியே குடித்துள்ளார். இறக்கையை உறித்து கோழியை அப்படியே சாப்பிடுவதிலிருந்து கூட வந்த மற்றொருவர் அதை வீடியோ எடுத்திருக்கிறார். இதனை சமூகவலைதளங்களில் வெளியிட்டும் இருக்கிறார்.
என்னதான் தண்ணி அடிச்சாலும் அதுக்குன்னு இப்படியா? மதுவின் கொடூரம் இப்படியே போனால் இன்னும் கொஞ்ச நாளில் கோழி போய்... நரமாமிசம் சாப்பிடற நிலைமை வந்துடும்போல இருக்கு! அட தேவுடா!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications