பெங்களூரில் ஃபேஸ்புக் காதலனிடம் கற்பை இழந்து, தூக்கில் தொங்கிய 14 வயது சிறுமி

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 14 வயது ராணி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். அவர் கடந்த செப்டம்பர் மாதம் ஃபேஸ்புக் மூலம் மனோஜ் குமார் என்பவருடன் நட்பானார். மனோஜ் குமார் ஏலஹன்காவில் உள்ள சோஷாத்ரிபுரம் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
தான் ஹாலிவுட் நடிகர்கள் போன்றும், பார்முலா ஒன் டிரைவர்கள் போன்றும் பைக் ஓட்டுவேன் என்று குமார் ராணியிடம் தெரிவித்துள்ளார். இதை நம்பிய ராணி குமாரிடம் மயங்கிவிட்டார். இத்தனைக்கும் ராணி வீட்டில் இன்டர்நெட் இல்லை. இன்டர்நெட் சென்டருக்கு சென்று அங்கு ஃபேஸ்புக் மூலம் குமாருடன் பேசி வந்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் குமார் அழைத்ததின்பேரில் நந்தினி லேஅவுட்டில் அவர் தங்கியிருந்த இடத்திற்கு ராணி சென்றுள்ளார்.
அங்கு குமார் ராணியை கட்டாயப்படுத்தி உறவு கொண்டுள்ளார். அதன் பிறகு ராணியிடம் அவரது தோழிகளின் விவரம், போன் எண்கள், ஃபேஸ்புக் கணக்கு பற்றி கேட்டு வந்துள்ளார். இதனால் ராணிக்கு சந்தேகம் வந்துள்ளது. இத்தனை விவகாரங்கள் நடந்ததும் ராணியின் பெற்றோருக்கு தெரியாது.
இந்நிலையில் ராணி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு குமாரிடம் கேட்க, அவரோ நான் இது எல்லாம் ஒரு ஜாலிக்காக செய்தேன் என்று கூறி நழுவிவிட்டார். இதனால் மனமுடைந்த ராணி நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய் பணி முடிந்து நேற்று இரவு வீடு திரும்பியபோது கதவு உட்புறமாக பூட்டியிருந்தது.
இதையடுத்து கதவை உடைத்து பார்த்தபோது ராணி தூக்கில் பிணமாகத் தொங்கினார். இது குறித்து ராணியின் குடும்பத்தார் கூறுகையில், அவர் சில நாட்களாகவே ஒரு மாதிரியாக இருந்தார். நாங்கள் அவர் படிப்பை பற்றி கவலைப்படுகிறார் என்று நினைத்தோம். நேற்று அவர் தனது தம்பியை அதே தெருவில் வசிக்கும் உறவினரின் வீட்டில் விட்டுவிட்டு வந்து தற்கொலை செய்துள்ளார் என்றனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மனோஜ் குமாரை கைது செய்தனர். அவர் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சாகும் முன்பு ராணி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
மனோஜ் என்னை கண்டுகொள்ளாமல் இருப்பதால் வேதனையாக உள்ளது. நான் சந்தித்து காதலில் விழுந்து 2 மாதங்கள் தான் ஆகின்றன. எல்லாம் நன்றாக சென்றது. நான் அவருக்காக அனைத்தையும் தியாகம் செய்தேன். அவர் என்னுடன் உறவு வைத்துக் கொண்டார். ஆனால் தற்போது அனைத்தும் ஒரு ஜாலிக்காக செய்தேன் என்கிறார். அவர் எப்படி இப்படி செய்யலாம்? என் வாழ்க்கை கெட்டுவிட்டது. எனக்கு வாழ பிடிக்கவில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications