"கோட் சூட் போட்டு பகலிலேயே திருட வருகிறார்கள்..." நில ஆர்ஜித விவகாரத்தில் ராகுல் பாய்ச்சல்!!
டெல்லி: விவசாயிகளிடம் இருந்து லட்சம் ரூபாய்க்கு நிலத்தை வாங்கி கார்ப்பரேட்டுகளுக்கு பல கோடிகளுக்கு விற்பனை செய்து கொள்ளையடிக்கிறது மத்திய அரசு என்று நில ஆர்ஜித மசோதா குறித்து லோக்சபாவில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நில ஆர்ஜித மசோதா, நெட் நியூட்டிராலிட்டி விவகாரங்களில் மத்திய அரசை வறுத்தெடுத்தவர் ராகுல் காந்தி. அதுவும் 56 நாட்கள் அரசியல் லீவ் போட்டுவிட்டு நாடு திரும்பிய பின்னர் ராகுல் நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சுகள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

இன்றும் நாடாளுமன்றத்தில் ராகுல் புயலைக் கிளப்பினார். நில ஆர்ஜித மசோதா குறித்து இன்று ராகுல் பேசியதாவது:
நாங்கள் நில ஆர்ஜித மசோதாவை கொண்டு வர 2 ஆண்டுகாலம் எடுத்துக் கொண்டோம். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசோ குறுகிய காலத்திலேயே அந்த மசோதாவை கொலை செய்துவிட்டது.
எங்களைப் பொறுத்தவரை நாங்கள் நிலத்தை கையகப்படுத்தும் போது விவசாயிகளின் நலனைப் பற்றி அக்கறை கொண்டோம்.. ஆனால் நீங்களோ நிலத்துக்கு உரிமையாளரை கேட்காமலேயே நிலத்தை கையகப்படுத்துகிறீர்கள்... உங்களுக்கு சமூக மதிப்பீடுகளை பற்றிய கவலை இல்லை.. ஆனால் எங்களுக்கு அப்படியான ஒரு கவலை இருந்தது.
நிலத்தை கையகப்படுத்தி 5 ஆண்டுகளில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாவிட்டால் நிலத்தை விவசாயிகளிடமே கொடுத்துவிடுவதுதான் எங்கள் ஆட்சியின் நில ஆர்ஜித மசோதா.. ஆனால் இதனை நிராகரிக்கிறது உங்களது ஆட்சி மசோதா...
நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் 40% இடம் காலியாக உள்ளது. நீங்கள் விவசாயிகளிடம் இருந்து லட்சத்துக்கு நிலத்தை வாங்கி கார்ப்பரேட்டுகளுக்கு கோடிக்கணக்கில் விற்பனை செய்து பகல் கொள்ளையடிக்க முயற்சிக்கிறீர்கள்...
முன்பெல்லாம் இரவு நேரத்தில்தான் திருடர்கள் வருவார்கள்.. இப்போது நிலத்தை கொள்ளையடிக்க கோட் சூட் போட்டுக் கொண்டு பட்ட பகலிலேயே வருகிறார்கள்..
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications