ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்: பிப்ரவரி 10ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு
ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறுகிறது. ஏழாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு மார்ச் 7ஆம் தேதி நடைபெறும். மார்ச் 10ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் இந்த வருடம் நடைபெறவுள்ளது.
இதற்கான அறிவிப்பை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா வெளியிட்டு வருகிறார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
கொரோனா சமயத்தில் தேர்தலை நடத்துவது சவலான ஒன்று என்றும் பாதுகாப்பான தேர்தலை நடத்துவதே முன்னுரிமை என்றும் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து 7 கட்டமாக தேர்தல்நடைபெறும் என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்திற்கு ஏழு கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் மணிப்பூர் மாநிலத்திற்கு இரு கட்டமாகவும் தேர்தல் நடைபெறும்.
உத்தரப் பிரதேசம் - முதல் கட்டம் - பிப்ரவரி 10
உத்தரப் பிரதேசம் - இரண்டாம் கட்டம் - பிப்ரவரி 14
உத்தரப் பிரதேசம் - மூன்றாம் கட்டம் - பிப்ரவரி 20
உத்தரப் பிரதேசம் - நான்காம் கட்டம் - பிப்ரவரி 23
உத்தரப் பிரதேசம் - ஐந்தாம் கட்டம் - பிப்ரவரி 27
உத்தரப் பிரதேசம் - ஆறாம் கட்டம் - மார்ச் 3
உத்தரப் பிரதேசம் - ஏழாம் கட்டம் - மார்ச் 7
பிற செய்திகள்:
- ஸ்டீஃபன் ஹாக்கிங்: காலப் பயணிகளுக்கு பார்ட்டி ஏற்பாடு செய்த அறிவியல் மேதை
- முள்ளெலி தோலில் ஆன்டிபயாடிக் எதிர்ப்பு பாக்டீரியா – என்ன இது?
- கூட்டுறவு சங்க பதவிக்கால குறைப்பு மசோதா: ஸ்டாலின் அரசு இனி என்ன செய்யும்?
- ஆன்லைன் மோசடி: பணத்தை இரட்டிப்பாக்க ஆசைப்பட்டு ஏமாற்றப்பட்ட கிராம மக்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













Click it and Unblock the Notifications