விதியை மாறி பொது செயலாளர்- சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ், பெங்களூர் சிறைக்கு அனுப்பியது
பொதுச்செயலர் பதவி தொடர்பாக சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி: அதிமுகவின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் தர சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் சிறைச்சாலை முகவரிக்கே அனுப்பப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக பொதுக் குழுவில் இடைக்கால பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டார். இதற்கு அதிமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் அதிமுக சசிகலா, ஓபிஎஸ் என இரண்டு அணிகளாகப் பிளவுபட்டது. அத்துடன் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியின் 10 எம்.பிக்கள் நேற்று தேர்தல் ஆணையத்திடம் ஒரு மனுவை அளித்தனர்.
ராஜ்யசபா எம்பி மைத்ரேயன் தலைமையில் அதிமுக எம்பிக்கள் 10 பேர் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்த இக்குழுவினர், அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலர் பதவி என்பது இல்லை. ஆகையால் சசிகலா பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

இந்த மனுவை ஏற்று சசிகலாவுக்கு இன்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ஓபிஎஸ் அணியினரின் புகார் குறித்து வரும் 28-ந் தேதிக்குள் விளக்கம் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸுக்கு பதில் தராவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications