சோனியா மருமகனின் சட்ட விரோத நில டீலிங்கிற்கு ஹரியானா அரசு உடந்தை: மோடி குற்றச்சாட்டு
சண்டீகர்: சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வத்ரா மற்றும் டிஎல்எப் நிறுவனங்கள் நடுவேயான நில வர்த்தகத்தை அவசர கதியில் ஹரியானா அரசு நிறைவேற்றிக் கொடுத்துள்ளது என்ற பகீர் குற்றச்சாட்டை முன்வைத்த பிரதமர் நரேந்திர மோடி, இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கைவிடுத்தார்.
ஹரியானா மாநில சட்டசபைக்கு வரும் 15ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. அம்மாநிலத்தின் ஹிசார் பகுதியில் இன்று பாஜகவுக்கு ஆதரவு திரட்டி, மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், "புபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான ஹரியானா அரசு, ராபர்ட் வத்ராவுக்கு உடந்தையாக செயல்படுகிறது. டிஎல்எப் நிறுவனத்துடனான வத்ராவின் டீலிங்குகளுக்கு அவசர கதியில் ஹரியானா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஏனெனில், தேர்தல் முடிந்து ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், சட்ட விரோத டீலிங்குகளுக்கு அனுமதி கிடைக்காது என்று ஹூடா அரசுக்கு நன்கு தெரிந்துள்ளது. எனவேதான், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஹூடா அரசு இதுபோன்ற முடிவை எடுத்துள்ளது. காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களிடமிருந்து முதல்வர் ஹூடாவுக்கு வந்த நெருக்கடிகளால் அவர் இம்முடிவை எடுத்திருப்பார் என்று கருதுகிறேன்.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக ஹரியானா முதல்வர் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.
ஹரியானாவின் ஹூடா தலைமையிலான அரசும், காங்கிரஸ் கட்சியும், தங்களது தோல்வியை முன்கூட்டியே ஒப்புக்கொண்டு விட்டதை, இந்த வெட்கங்கெட்ட செயல் உறுதிப்படுத்திவிட்டது. இவ்வாறு மோடி பேசினார்.
குர்கான் பகுதியில் ரூ.58 கோடி மதிப்புக்கு சட்ட விரோத நில டீலிங் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி கடந்த 2012, அக்டோபர் மாதத்தில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா , அந்த வர்த்தகத்தை ரத்து செய்தார். ஆனால் திடீரென இப்போது மாநில அரசு அந்த வர்த்தகத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதையே மோடி குற்றச்சாட்டாக முன்வைத்துள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications