முடிச்சி விட்டீங்க போங்க! ஜார்க்கண்டில் பாஜகவை காலி செய்த ஹேமந்த் சோரன் கூட்டணி! ரிசார்ட் தேவையில்லை

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்க்கண்டில் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என நினைத்த பாஜகவின் கனவை இந்தியா கூட்டணி தவிடுபொடியாக்கியுள்ளது. மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 51 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. கிட்டத்தட்ட இந்தியா கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டதால் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

81 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு கடந்த 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறின. இதனால், பாஜகவினர் உற்சாகத்தில் இருந்தனர்.

election results 2024 jharkhand assembly election 2024 by poll election 2024 2024

இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியதும் பாஜக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்தது. ஆனால் அடுத்தடுத்த சுற்றுக்களில் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி முன்னிலை பெறத் தொடங்கியது. அடுத்தடுத்த சுற்றுக்களில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. ஆனாலும் முதலில் பெரும்பான்மைக்கு தேவையான 41 இடங்களை தாண்டி ஓரிரு இடங்களில் மட்டுமே பாஜக முன்னிலை வகித்தது.

சரியாக சொல்வதென்றால் காலை 10.10 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 40 இடங்களிலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி 38 இடங்ககளிலும் முன்னிலை வகித்தது. ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க 41 இடங்களில் வெற்றி பெறுவது அவசியம். இந்த பார்டரை ஒட்டியே முன்னிலை நிலவரம் செல்வதால், வெற்றி யாருக்கும் என்பதை யூகிக்க முடியாத நிலை இருந்தது.

இதனால், தேர்தல் ரிசல்ட் வெளியாகும் முன்பே வெற்றி வாய்ப்பில் உள்ள வேட்பாளர்களை அந்தந்த கட்சிகள் தொடர்பில் வைத்து இருக்க முனைப்பு காட்டும் என கூறப்பட்டது. ஆட்சி அமையும் வரை வெற்றி பெற்றவர்கள் அணி மாறிவிடக்கூடாது என்பதால் கூவத்தூர் பாணியில் ரிசார்ட்களில் தங்க வைக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் சொல்லும் கருத்தாக இருந்தது.

ஆனால் அதற்கு எல்லாம் இடம் கொடுக்காமல் நேரம் செல்ல செல்ல.. இந்தியா கூட்டணி 51 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. பாஜக கூட்டணி 28 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்தது. இதனால் ரிசார்ட் தேவையில்லை என்ற சூழல் உருவானது. அடிக்கடி அரசியல் குழப்பங்கள் நிலவும் மாநிலமாக ஜார்க்கண்ட் இருந்து வரும் நிலையில், இந்த தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என நினைத்த பாஜகவின் கனவு தவிடுபொடியானது.

மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 51 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணியில், ஜேஎம்எம் 30 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி 28 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இதில் பாஜக மட்டும் 26 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் ஜேஎம்எம் கூட்டணி வெற்றி உறுதியாகிவிட்டதால் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.

2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 இடங்களையும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 16 இடங்களையும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஒரு இடத்தையும் கைப்பற்றி கூட்டணி ஆட்சி அமைத்தன. பாஜகவிற்கு 25 இடங்களும், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சாவுக்கு 3 இடங்களும், அகில ஜார்கண்ட் மாணவர்கள் சங்கத்துக்கு 2 இடங்களும், மார்க்சிய லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் கிடைத்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+