தேர்தல் சீர்திருத்தங்கள்.. உங்க வேலை இல்லை..: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு
டெல்லி: தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வது அரசின் கொள்கை முடிவு... அது உச்சநீதிமன்றத்தின் வேலை அல்ல என்று மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்கள் பதவியில் நீடிக்கக் கூடாது, யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற உரிமை வாக்காளருக்கு உண்டு, யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான ஒப்புகைச் சீட்டு கொடுக்க வேண்டும் என்று அதிரடியாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வருகிறது.

இத்தகைய உத்தரவுகள் அரசியல்வாதிகளுக்கு பெரும் கிலியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் இதில் ஒன்றுபட்டு நிற்கின்றன.
இந்நிலையில் தண்டனை பெற்ற எம்.பி.,எம்.எல்.ஏக்கள் தகுதி இழப்பு தொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்ட அமைச்சகத்தின் சார்பில் கூடுதல் துணைத் தலைமை வழக்கறிஞர் பாராஸ் குஹட் நேற்று ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்க்கல் செய்தார்.
அதில் குற்றப் பின்னணியுடைய மக்கள் பிரதிநிதிகள், தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு.
அத்தகைய அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. அரசின் கொள்கை முடிவுகள் என்பவை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருக்குமேயானால் மட்டுமே நீதிமன்றங்கள் தலையிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 6 வாரங்களுக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஆர்.எம்.லோதா, ஆர்.கே.சிங் ஆகியோர் கொண்ட பெஞ்ச் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications