ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு இமெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்த ஐஎஸ்ஐஎஸ்
மும்பை: ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இமெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் அலுவலக இமெயில் ஐடிக்கு [email protected] என்ற ஐடியில் இருந்து இமெயில் வந்துள்ளது. அந்த இமெயிலின் முழு விவரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள இரண்டு வாக்கியங்கள் பற்றி தெரிய வந்துள்ளது.

இமெயிலில் கூறப்பட்டுள்ளதாவது,
எனக்கு ஒருவர் பணம் கொடுத்து உங்களை கொலை செய்யுமாறு கூறியுள்ளார். நீங்கள் அவரை விட அதிக பணம் கொடுத்தால் இது குறித்து நாம் பேசி முடிவுக்கு வரலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் என்று அந்த இமெயில் ஐடி துவங்குவதால் இது தீவிரவாதிகளின் வேலையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இது குறித்து மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா கூறுகையில்,
ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொலை மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது. அந்த இமெயிலில் ஐஎஸ்ஐஎஸ் பெயர் உள்ளது. இமெயிலை அனுப்பியவர்களை கண்டுபிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
இமெயில் வந்தவுடன் அது குறித்து ரிசர்வ் வங்கி குற்றப் பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளது. இதையடுத்து சைபர் குற்ற விசாரணை குழு விசாரணையில் இறங்கியுள்ளது. அந்த இமெயில் ஐடி குறித்த தகவல்களை அளிக்குமாறு அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தை சைபர் குற்ற விசாரணை குழு கேட்டுக் கொண்டுள்ளது.
அந்த இமெயில் ஐடி ஆஸ்திரேலியா, இத்தாலி, அமெரிக்கா, கனடா, நைஜீரியா, போலந்து, பெல்ஜியம், ஜெர்மனி, ஹாங்காங் மற்றும் உக்ரைன் ஆகிய 10 நாடுகளில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications