சிபிஎம்க்கு ஓட்டுப் போட்டால் மத்தியில் ஆட்சி மாறி விடும்...: கேரளாவில் ராகுல் எச்சரிக்கை
திருவனந்தபுரம்: கேரளாவில் கம்யூனிஸ்டுகளுக்கு வாக்களித்தீர்களானால் மத்தியில் வேறு ஆட்சி அமைய வழி வகுத்து விடும் என மறைமுகமாக காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிக்கும் படிக் கேட்டுக் கொண்டார் ராகுல்.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கேரளாவில் ஆற்றிங்கல், செங்கனூர், காசர்கோடு, ஆகிய இடங்களில் நேற்று பிரசார பொதுக்கூட்டங்கள் நடந்தது. அப்போது பலத்த மழையும் பொருட்படுத்தாது தங்களது வேட்பாளார்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்.

தனது பிரச்சார உரையில் பாஜக பிரதமர் வேட்பாளார் நரேந்திரமோடியையோ அல்லது மற்ற எதிர்க்கட்சி தலைவர்களையோ பெயர் சொல்லி நேரடியாக தாக்கி பேசாமல் மறைமுகமாகவே அவர்களை குறை கூறினார் ராகுல்.
மேலும், அவர் தனது பிரச்சாரத்தில் பேசியதாவது :-
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். எனவே கருத்து கணிப்புகளை மக்கள் நம்ம வேண்டாம். கேரளாவில் கம்யூனிஸ்டுகளுக்கு ஓட்டுபோட்டால் அது மத்தியில் வேறு கட்சி ஆட்சி அமைக்க வழிவகுத்து விடும்.
எனவே காங்கிரசுக்கு உங்கள் ஓட்டுகளை வழங்குங்கள். யாரையும் பாதிக்காத வகையில் கஸ்தூரிரங்கன் அறிக்கை அமுல்படுத்தப்படும். ஏழைகளுக்கு தரமான மருத்துவ வசதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவனந்தபுரம் தொகுதியை சேர்ந்த சசிதரூர் இந்த தொகுதி வளர்ச்சிக்காக பாடுபட்டு உள்ளார். அவர் வெற்றி உறுதி. அவருக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும். குஜராத்தைவிட கேரளா சிறந்த மாநிலமாக உள்ளது. இங்கு அதிகம் படித்தவர்கள் உள்ளனர்' என இவ்வாறு அவர் கூறினார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மியூசிக்கிற்கு தடை.. பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம்.. தாலிபான்கள் போல் ரூல்ஸ் போட்ட கேரளா ஜிம் -
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்!











Click it and Unblock the Notifications