திரண்டு வந்த பாஜக தொண்டர்கள்.. மிரண்டுபோன பசுமாடுகள்! பாஜக முன்னாள் துணை முதல்வருக்கு மோசமான காயம்
காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் பாஜக முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல் கலந்து கொண்ட பேரணியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று இந்த ஆண்டு உடன் 75 ஆண்டுகள் முடிகிறது. இதை மத்திய அரசு மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு தீவிரமாகச் செய்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முக்கிய இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

75ஆவது சுதந்திர தின விழா
இந்த 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். இதற்குத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் உள்ள அனைவரின் வீடுகளில் தேசியக் கொடிகளை மக்கள் ஏற்ற வேண்டும் எனப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

தேசியக் கொடிகள்
முன்னதாக இந்தியாவில் இருந்த சட்டத்தின்படி சூரியன் அஸ்தமித்த பிறகு தேசிய கொடியை இறக்கிவிட வேண்டும். இந்நிலையில், அனைவரும் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து தேசியக் கொடியை ஏற்ற வழிவகை செய்யும் வகையில், சட்டத் திருத்தங்களும் கொண்டு வரப்பட்டது. மேலும், தேசியக் கொடியை எப்படி மடிக்க வேண்டும், எப்படிச் சரியான முறையில் கொடியை ஏற்ற வேண்டும் என்பது குறித்தும் மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருந்தது.

குஜராத்
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் பல கோடி மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி உள்ளனர். அதேபோல பாஜக சார்பிலும் நாடு முழுக்க பல்வேறு தேசியக் கொடிகளை ஏற்ற நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் ஹர் கர் திரங்கா என்ற பெயரில் மாபெரும் பேரணிகள் நடைபெற்று வருகிறது. பல மாநில முக்கிய பாஜக தலைவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னாள் துணை முதல்வர்
அதன்படி பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் ஹர் கர் திரங்கா பேரணி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் குஜராத் மாநில பாஜக முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல் கலந்து கொண்டார். மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள காடி பகுதியில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ஏராளமான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தாக்குதல்
திடீரென அத்தனை கூட்டம் திரண்டதால் அந்தச் சமயம் யாரும் எதிர்பார்க்காத வகையில் அங்குத் தெருக்களில் சுற்றிக் கொண்டு இருந்த மாடுகள் மிரண்டுபோய்விட்டன. தெருவோர மாடுகள் மிரண்டு ஓடியதில் அங்குக் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது சில நாடுகள் நிதின் படேலையும் முட்டியுள்ளன. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டது.

முதலுதவி
இதையடுத்து அங்கேயே அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். கடந்த 2012ஆம் ஆண்டு முதல் பாஜக சார்பில் எம்எல்ஏவாக உள்ளவர் நிதின் பட்டேல். இவர் விஜய் ரூபானி முதல்வராக இருந்த சமயத்தில் 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை குஜராத் துணை முதல்வராகவும் இருந்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications