கொரோனா: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனையில் அனுமதி
கொல்கத்தா: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் முதுபெரும் இடதுசாரித் தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தேவ் பட்டாச்சார்யா மற்றும் அவரது மனைவி மீரா ஆகியோருக்கு கடந்த 17-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மித்ரா உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புத்ததேவ் பட்டாச்சார்யா வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மீரா, உடல்நலம் தேறியதால் திங்கள்கிழமையன்று வீடு திரும்பினார். இந்த நிலையில் இன்று புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

அவரது ஆக்சிஜன் அளவு 85-க்கு கீழே இருந்தது. இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications