"அனிமல்".. கொல்கத்தா கொலைகாரன் ஒரு மிருகம்.. சைக்கோஅனாலிஸில் வாயை பிளந்த சிபிஐ.. அதிர்ச்சி
சென்னை: கொல்கத்தா மருத்துவமனை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயிடம் நடத்தப்பட்ட சோதனை சிபிஐ அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சிபிஐ நடத்திய மனோ பகுப்பாய்வு சோதனை எனப்படும் சைக்கோஅனாலிஸில் சோதனையில், அந்த நபர் "மிருக உள்ளுணர்வு" கொண்ட "பாலியல் வக்கிரத்தின்" உச்ச உணர்வுகளை கொண்ட நபராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதாவது மிருகம் போன்ற குணம் கொண்டவர், கோவம் கொண்டனர்.. அதோடு பாலியல் ரீதியாக கடும் வக்கிரம் கொண்டவர் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கொலைகாரன் ராயை விசாரித்த மூத்த சிபிஐ மனோதத்துவ ஆய்வாளர்கள் குழு, ராய் அந்த குற்றச் சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை பற்றிய உணர்ச்சியின் சுவடு கூட இல்லாமல் இருக்கிறார். தான் செய்த குற்றத்தை பற்றி விவரிக்கையில் ஒரு சின் கவலை கூட இல்லாமல் விவரிக்கிறார்.அவர் சிரித்தபடியே சந்தோசமாக.. கொடூர குணம் கொண்டவராக உள்ளார் , என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தா கொடூரம்: கொல்கத்தாவில் நடந்த பலாத்காரம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் நடந்த நிர்பயா சம்பவத்திற்கு இணையாக மிகப்பெரிய கொடூரம் கொல்கத்தாவில் நடந்து உள்ளது.
கொல்கத்தாவின் RG Kar மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இந்த மருத்துவமனை தினமும் பல லட்சம் பேர் வரக்கூடிய மருத்துவமனை. இங்கே சர்வீஸ் சரியாக இருக்காது என்பதே பலரின் புகார். ஆனால் இலவச அரசு மருத்துவமனை என்பதால்.. இங்கே தினமும் பலர் வருவது வழக்கம்.
எல்லா மருத்துவ கல்லூரி போலவே இங்கேயும் அதீத பணி நேரம் சுமை இருக்கும். அப்படிப்பட்ட நிலையில்தான் இரண்டாம் ஆண்டு முதுகலை பயிற்சி மருத்துவரான அந்த பெண் டாக்டர்.. அங்கே இரவு 2 மணி வரை வேலை பார்த்துள்ளார்.
அந்த 31 வயது பெண் தனது ஜூனியர்களுடன் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, அதிகாலை 2 மணிக்கு சிறிது ஓய்வெடுக்க முடிவு செய்து உள்ளார். மருத்துவமனையில் ஓய்வு எடுக்க அறை இல்லாததால், செமினார் ஹாலில் ஓய்வெடுப்பது பாதுகாப்பானது என்று கருதி அங்கேயே சென்று தூங்கி உள்ளார்.
ஆகஸ்ட் 9 அன்று இந்த சம்பவம் எல்லாம் நடந்து உள்ளது. அன்று காலை வகுப்பிற்கு வந்தவர்கள்.. அந்த கருத்தரங்கு அரங்கில் அந்த பெண்ணின் உடல் அரை நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது.
நம்மிடம் தெரிவிக்கப்பட்ட தகவலில், அந்த பெண் கொலை செய்யப்படும் முன் கடுமையான பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். அவரின் பெண் உறுப்பில் 150 mg விந்தணு இருந்துள்ளது. இதன் அர்த்தம் இந்த சம்பவத்தை தனி ஆள் செய்திருக்க முடியாது.
அங்கே உள்ளே மாணவர்கள் சந்தேகிப்பது.. ஒரு ஆள் செய்யவில்லை, அப்போது ஷிப்டில் இருந்த சிலரும் இதை செய்துள்ளனர். அந்த பெண் உணவிற்கு பின் அதீதமாக தூக்கம் வந்ததாக கூறியுள்ளார். அவரின் உணவில் இவர்கள் எதையாவது கலந்து இருக்கலாம்.. திட்டமிட்டே இதை எல்லாம் செய்து இருக்கலாம் என்று நம்மிடம் கூறி உள்ளனர்.
உடலில் பல காயங்கள் உள்ளன.. அந்த பெண்ணின் கண்ணாடி உடைந்து இரண்டு கண்களில் குத்தி உள்ளது. இதனால் கண்களில் ரத்தம் இருந்துள்ளது. காதுகளில் அடிக்கப்பட்ட நிலையில் அங்கேயும் ரத்தம் உள்ளது. உதடுகள் கிழிந்து ரத்தம் வந்துள்ளது. அந்த பெண்ணின்.. இரண்டு கால்களும் உடைந்து உள்ளன. 90 டிகிரிக்கு கால்களை கொண்டு செல்லும் அளவிற்கு உடைத்து உள்ளனர்.
இதெல்லாம் நடக்கும் போது அந்த பெண் கத்த கூடாது என்பதால் அந்த பெண்ணின் தொண்டையை உடைத்து உள்ளனர். அதேபோல் கழுத்தில் உள்ள தைராய்டு கேலண்டு உடைக்கப்பட்டு உள்ளது. கால்கள் உடைக்கப்பட்ட போது, தலையின் பின்புறம் தாக்கப்பட்ட போது அந்த பெண் மரணம் அடைந்து உள்ளார்.
காலை 3 மணியில் இருந்து 5 மணி வரை இந்த சம்பவம் நடந்து உள்ளது. அதாவது பெண் தூங்க சென்ற 30 - 40 நிமிடங்களில் பின்னாடியே தொடர்ந்து சென்று இப்படி செய்துள்ளனர்.
இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 33 வயதான சஞ்சோய் ராய் என்ற நபரை கைது செய்துள்ளனர். இவர் அங்கே தன்னார்வலராக போலீஸார் உடன் இணைந்து செயல்பட்டு உள்ளார். இவர் வெறும் தன்னார்வலர்தான். ஆனால் போலீஸ் குழுக்களில் இருக்கிறார், அங்கே கிடைத்த காண்டாக்ட் மூலம் போலீஸ் கமிட்டி ஒன்றிலும் கூட கமிட்டி உறுப்பினராக இருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications