தோற்கும் திருமணங்கள்… பாகிஸ்தானில் இருந்து வெளியேறும் இந்தியப் பெண்கள்
ஹைதராபாத்: இந்தியா, வங்கதேசத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மணமுடித்துச் செல்லும் பெண்களின் திருமண வாழ்க்கை எளிதில் முறிந்துவிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில மாதங்களில் மட்டும் பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிய 226 பெண்கள் குழந்தைகளுடன் அவதிப்படுகின்றனர்.
வெளிநாட்டு ஆண்களை திருமணம் செய்யும் இந்திய பெண்கள் சிலரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக பாகிஸ்தானியரை திருமணம் செய்த பெண்களில் பெரும்பாலானவர்கள் சிக்கலில் தவிக்கின்றனராம்.

எல்லை தாண்டி
இந்தியா பாகிஸ்தான் இடையே எத்தனையோ ஆண்டுகளாக அறிவிக்கப்படாத போர்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் அங்குள்ள மாப்பிள்ளைகளுக்கு நம் நாட்டு பெண்களை தைரியமாக திருமணம் செய்து கொடுக்கின்றனர்.
சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை எல்லை தாண்டி திருமணம் செய்து கொண்டார் பிரபலமானவர்களின் திருமணம் பரபரப்பாக பேசப்பட்டது. அதே போல இந்தியாவில் இருந்து பல பெண்கள் பாகிஸ்தானுக்கு மணமுடித்துச் செல்கின்றனர்.

6 இந்துக்கள்
அவர்களில் 226 பெண்கள் தற்போது தங்கள் குழந்தைகளுடன் இந்தியா திரும்பியுள்ளனர். அவர்களில் 6 பேர் இந்துக்கள்.

விவாகரத்து
விவாகரத்து மற்றும் கணவரின் திடீர் மரணம் போன்ற காரணங்களால் அவர்கள் தங்களது பிறந்த மண்ணுக்கு வந்துள்ளனர்.

குடியுரிமை சிக்கல்
அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர்கள். எனவே, அவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைப்பதில் கடும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளிடையே உருவாகியுள்ள பிரச்சினையில் அவர்களை வைத்து பராமரிப்பதில் குடும்பத்தினரும், நண்பர்களும் பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியுள்ளது.

நீண்டகால விசா
அதனால் அவர்களுக்கு உதவ முடியாத நிலை உள்ளது. எனவே, நிரந்தர இந்திய குடியுரிமை கிடைக்கும் வரை நீண்ட கால விசாவில் அவர்கள் தங்க வேண்டிய நிலை உள்ளது.

பாகிஸ்தானியர்கள் வருகை
இதற்கிடையே நாள்தோறும் 5 முதல் 10 பாகிஸ்தானியர்களும், வங்காளதேசத்தினரும் இந்தியா வருகின்றனர். அவர்கள் 14 நாட்கள் வரை மட்டுமே தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

7 வருடங்களில்
அதே நேரம் ஏற்கனவே குடியுரிமையை துறந்த விட்டு பாகிஸ்தானியராக மாறிய பெண்கள் மீண்டும் திரும்பி வந்து 7 வருடங்கள் தங்கியிருந்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது. அதற்கான பணியில் மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications