ஆந்திராவில் அச்சடிக்கப்பட்ட பலகோடி ரூபாய் கள்ளநோட்டுகள் தமிழகத்தில் ஊடுருவல்.. அதிர்ச்சி தகவல்
சித்தூர் : ஆந்திராவில் அச்சடிக்கப்பட்ட பலகோடி ரூபாய் கள்ளநோட்டுகள் தமிழகத்தில் ஊடுருவியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குப்பத்தில் பிடிப்பட்ட கள்ள நோட்டு கும்பல் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளது.
தமிழக ஆந்திர எல்லையில் கள்ளநோட்டுக்களை சிலர் அச்சடித்து புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு தகவல்கிடைத்தது. இதையடுத்து ஆந்திர மாநிலம் குப்பத்தில் கள்ளநோட்டு கும்பல் 6 பேரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 76 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுக்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இவை அனைத்தும் ரூ.2000, ரூ.500, ரூ.200, ரூ.100 கள்ள நோட்டுக்கள் ஆகும்.

கள்ள நோட்டு அச்சடிப்பு
குப்பம் அருகே விஜலாபுரத்தில் ஒரு வீட்டையே கள்ள நோட்டுக்களை கத்தை கத்தையாக அடிக்கும் அச்சமாக மாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

6 பேரில் மூன்று பேர்
கைது செய்யப்பட்ட 6 பேரில் மணிகண்டன் (28), சுரேஷ்குமார்(23), குபேந்திரன்(50) ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள மருவிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனந்தகுமார் (33) குப்பத்தைச் சேந்தவர் , சுரேஷ் ரெட்டி (31), ஹேமந்த் (26) ஆகியோர் திருப்பதியை சேரந்தவர்கள் என்பதும் தெரியிவந்துள்ளது.

கள்ளநோட்டுக்கள் புழக்கம்
இவர்கள் பல கோடி ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சடித்து தமிழகத்தில் புழக்கத்தில் விட்டு இருப்பதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீசாரிடம் வாக்குமூலம்
சிறிய பெட்டிக்கடைகள், சிறிய மளிகை கடைகள் இவற்றை குறிவைத்து தான் கள்ளநோட்டுக்களை இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் புழக்கத்தில் விட்டுருப்பதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications