திருமணமான மகளுக்கு தந்தை தனது சொத்தை அளிக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி
டெல்லி: திருமணமான மகளுக்கு தந்தை தனது சொத்தை அளிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேற்வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் பிஸ்வ ரஞ்சன் சென்குப்தா. கொல்கத்தா சால்ட்லேக் சிட்டியில் உள்ள புர்பாஞ்சல் ஹவுஸிங் எஸ்டேட்டில் சென்குப்தாவுக்கு சொந்தமான ஃபிளாட் உள்ளது. அவரது கடைசி காலத்தில் மனைவியும், மகனும் மதிக்காததால் அவர் திருமணமான தனது மகள் இந்திராணி வாஹியிடன் வீட்டில் வசித்து வந்தார். உயிர் இழக்கும் முன்பு அவர் தனது ஃபிளாட்டை இந்திராணிக்கு அளிக்குமாறு கூறியுள்ளார்.

மேற்கு வங்க கூட்டுறவு சங்க விதிகளின் படி ஃபிளாட் உரிமையாளர் அதை தனது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு தான் அளிக்க முடியும். (திருமணம் ஆனதால் இந்திராணி வேறு வீட்டு பெண்ணாகிவிட்டார்). இந்த விதிமுறையை எடுத்துக்கூறி ஃபிளாட்டை இந்திராணிக்கு அளிக்க சென்குப்தாவின் மனைவியும், மகனும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து ஃபிளாட்டை இந்திராணியின் பெயருக்கு மாற்ற கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மறுத்துவிட்டார். இதை எதிர்த்து இந்திராணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இருந்த ஒரு நீதிபதி ஃபிளாட்டை இந்திராணியின் பெயருக்கு மாற்ற அனுமதி அளித்தார். ஆனால் மற்ற நீதிபதிகள் அனுமதி அளிக்கவில்லை.
இதை தொடர்ந்து உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இந்திராணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்திராணி திருமணமாகி வேறு வீட்டிற்கு சென்றாலும் அவரும் சென்குப்தா குடும்பத்தை சேர்ந்தவர் தான். அதனால் ஃபிளாட்டை தாராளாக இந்திராணியின் பெயருக்கு மாற்றலாம்.
ஒரு தந்தை தனது சொத்தை திருமணமான மகளுக்கு அளிக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications