போனில் வந்த கெட்ட செய்தி.. மகனின் மரணத்தால் உடைந்த தந்தை.. சுஷாந்த் சிங் அப்பாவின் உடல் கவலைக்கிடம்!

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலையை தொடர்ந்து அவரின் அப்பாவின் உடல்நிலை தற்போது மோசம் அடைந்து கவலைக்கிடமாக உள்ளது.

Recommended Video

    மரண செய்தி கேட்டு அதிர்ச்சி... Sushant singh அப்பா மருத்துவமனையில் அனுமதி

    பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தனது மும்பை வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். வீட்டு அறையில் தூக்கு மாட்டி இவர் தற்கொலை செய்து கொண்டார்.

    சுஷாந்த்சிங் மரணம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. இது தொடர்பாக பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்தியா முழுக்க எல்லோருக்கும் இந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பெரிய கூட்டம்

    பெரிய கூட்டம்

    இந்த நிலையில் இந்த மரண செய்தி கேட்டு சுஷாந்த் சிங்கின் அப்பாவின் உடல் நிலை மிக மோசம் அடைந்து உள்ளது. சுஷாந்த் சிங் குடும்பம் பாட்னாவில் வசித்து வருகிறது. அங்கிருக்கும் ராஜீவ் காலனியில் இவரின் குடும்பம் வசித்து வருகிறது. இந்த துக்க செய்தி கேட்டதும் சுஷாந்த் சிங்கின் பாட்னா வீடு முன் பெரிய அளவில் கூட்டம் கூடியது. மக்கள் வரிசையாக அவரின் வீடு முன் கூடினார்கள்.

    பெரிய அளவில் மீடியா

    பெரிய அளவில் மீடியா

    அதேபோல் மீடியாவும் அவரின் வீடு முன் பெரிய அளவில் கூடியது. இதில் சிலர் சுஷாந்த் சிங் குடும்பத்தினரிடம் பேட்டி எடுத்த நிகழ்வும் கூட நடந்தது. இது எல்லாம் சேர்த்து சுஷாந்த் சிங் குடும்பத்திற்கு பெரிய அழுத்தமாக மாறியது. இந்த நிலையில் சுஷாந்த் சிங் அப்பாவின் உடல் நிலை மிக மோசம் அடைந்து உள்ளது. சுஷாந்த் சிங் அப்பா கிருஷ்ணா குமார் சிங் உடல் தற்போது கவலைக்கிடமாக இருக்கிறது.

    உடல் கவலைக்கிடம்

    உடல் கவலைக்கிடம்

    அவர் ஏற்கனவே பல நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இதயத்திலும் பிரச்சனை இருந்துள்ளது. இந்த நிலையில் மகனின் இறப்பு செய்தி கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சுஷாந்த் சிங் அப்பா கிருஷ்ணா குமார் சிங் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். தற்போது அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரால் தற்போது பேச முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

    தகவல் வந்தது

    தகவல் வந்தது

    நேற்று மதியம் 2 மணி அளவில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் போன் மூலம் இந்த தகவல் அவரின் குடும்பத்திற்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போனில் போலீசார் தகவலை தெரிவித்துள்ளனர். அதன்பின் குடும்பம் என்ன செய்வது, லாக்டவுன் காலத்தில் எப்படி மும்பை செல்வது என்று தெரியாமல் குழம்பி இருக்கிறார்கள்.

    குடும்ப நிகழ்வில் கலந்து கொண்டார்

    குடும்ப நிகழ்வில் கலந்து கொண்டார்

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்தான் குடும்ப நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார். பீகாரில் இருக்கும் தனது சொந்த வீட்டில் குடும்பத்துடன் லாக்டவுனுக்கு முன் இருந்துள்ளார். சுஷாந்த் சிங் உறவினர்களிடம் சந்தோசமாக பேசி இருக்கிறார். ஆனால் லாக்டவுன் சமயத்தில் அவர் உறவினர்கள் உடன் சரியாக பேசவில்லை என்று கூறப்படுகிறது. இவரின் மரணத்தில் இன்னும் மர்மம் நிலவி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+