செல்போனும் கையுமாக இருந்த 15 வயது மகள்.. ஆத்திரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த காமுக தந்தை!
அமராவதி: எப்போதும் செல்போன் பார்த்துக் கொண்டிருப்பதால் ஆத்திரமடைந்த கொடூர தந்தை, 10 ஆம் வகுப்பு படிக்கும் மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார் 15 வயது மாணவி. இவர் தனது தாய் தந்தையுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார்.
மாணவியின் தந்தைக்கு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதால் அவரது மனைவியின் ஒரு சிறுநீரகத்தை தானமாக பெற்றுள்ளார். இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு மாணவியின் தாய் அவ்வப்போது தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.

வீட்டில் மகள்
அப்போது பெரும்பாலான நேரங்களில் தனது மகளை வீட்டில் விட்டுவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். வீட்டில் மகள் மட்டும் இருந்த நேரத்தை அந்த காமுக தந்தை பயன்படுத்திக் கொண்டு சிறுமியை மிரட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த சம்பவம் சிறுமிக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மாணவி
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சிறுமி வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் தந்தையின் கொடுமை தாள முடியாததால் வீட்டுக்கு செல்ல அஞ்சி பள்ளியிலேயே இருந்துள்ளார். எல்லோரும் வீட்டுக்கு சென்றுவிட்டார்கள், இந்த சிறுமி மட்டும் பள்ளியில் இருப்பதை அறிந்த ஆசிரியை அந்த மாணவியை அழைத்து ஏன் வீட்டுக்கு போகவில்லை என கேட்டுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த ஆசிரியை
அதற்கு மாணவி தனக்கு தந்தையால் நேர்ந்த கொடுமைகளை விவரித்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியை உடனடியாக மாணவியின் தந்தை மீது ஒரு புகாரை கொடுக்க அழைத்து சென்றார். இதையடுத்து போலீஸார் அந்த மாணவியின் 42 வயதாகும் தந்தையை கைது செய்தனர். பெற்ற மகளிடம் இப்படி மிருகத்தை விட கொடூரமாக நடந்துக் கொண்டது குறித்து போலீஸார் விசாரித்தனர்.

தந்தை வாக்குமூலம்
அதற்கு அவர் மாணவி எப்போதும் செல்போனும் கையுமாக இருந்தது தனக்கு பிடிக்கவில்லை என்றும் அதனால் உச்சகட்ட கோபத்தில் இவ்வாறு நடந்து கொண்டதாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவரை சிறையில் அடைத்த போலீஸார், சிறுமிக்கு கவுன்சலிங் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். பெற்ற மகள் என்றும் பாராமல் அந்த பிஞ்சை நாசம் செய்த தந்தையின் செயல் அனைவரையும் அதிர செய்துள்ளது.












Click it and Unblock the Notifications