பட்ஜெட் ரெடி...அல்வா கிண்டி பிரிண்டிங்கை தொடங்கி வைத்தார் அருண் ஜேட்லி
டெல்லி: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட் உரை) பிரதி எடுக்கும் பணியை நேற்று பாரம்பரிய முறைப்படி அருண் ஜேட்லி தொடங்கி வைத்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 23ம் தேதி துவங்குகிறது. 25ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும் , 29ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. பொது பட்ஜெட் பிரிண்டிங் செய்யும் பணியை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது கையால் அல்வாவைக் கிண்டி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து நாடளுமன்ற வடக்கு பிளாக் கட்டிடத்தில் மூடிய அறைக்குள் பட்ஜெட்டை பிரதியெடுக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாகியுள்ளனர். மிக ரகசியமாக தயாரிக்கப்படும் பட்ஜெட் ஆவணங்கள் பாதாள அறையில் தயார் செய்யப்படும். பட்ஜெட் உரை பிரதி எடுக்கும் வரை அந்த பகுதி உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
இந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மொபைல் போன்களை பயன்படுத்த முடியாது, தங்களது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவும் முடியாது. அந்த பகுதி முழுவதும் செல்போன்களை செயல் இழக்க செய்யும் அதி நவீன ஜாமர் கருவிகளும் பொறுத்தப்பட்டு இருக்கும்
பிப்ரவரி 29ம் தேதி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் வரை இவர்கள் யாரும் வெளியில் வர முடியாது. நிதியமைச்சக செயலர் மட்டும் வெளியே வர அனுமதிக்கப்படுவார்.
மொத்தம் 2500 பிரதிகள் அச்சடிக்கப்பட்டு பட்ஜெட் தாக்கல் அன்று மத்திய போலீஸ் பாதுகாப்புடன் நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் வரப்படும். பட்ஜெட் பிரதி எடுக்கும் பணிக்கு முன்பாக அல்வா தயாரித்து அதை அனைவரும் சாப்பிடுவது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதுதான் நேற்று நடந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications