Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முதலிரவு".. காப்பாத்துங்க.. பொண்டாட்டி டார்ச்சர்.. உடம்பெல்லாம் கடித்து.. போலீசுக்கு ஓடிய கணவன்

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: தொல்லை தாங்க முடியவில்லை.. நைட் நேரத்தில், தூங்க விடாமல் தன்னுடைய மனைவி டார்ச்சர் செய்வதாக, போலீசுக்கு ஓடியுள்ளார் ஒரு கணவர்..!

பொதுவாக கணவர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாக மனைவிமார்கள் போலீசில் புகார் தருவது வழக்கம்.. பல சமயங்களில் கோர்ட்டுக்கு சென்று விவாகரத்தும் கேட்டு வாங்கி கொள்வார்கள்.

ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் ஒரு சம்பவம் நடைபெற்றது.. ஆல்வார் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் சிங்... இவர் ஒரு ஆசிரியர்.. சுமன் என்ற பெண்ணை 7 வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

 குச்சி + ரிமோட் + துடைப்பம்

குச்சி + ரிமோட் + துடைப்பம்

தம்பதிக்குள் ஆரம்பத்தில் இருந்தே அடிக்கடி தகராறு வந்துள்ளது.. அந்த பெண்ணுக்கு கோபம் வந்தால், கணவனை சரமாரியாக அடித்து விடுவாராம்.. தினம் தினம் அடிவாங்க முடியாமல் அழுதுள்ளார் அஜித்சிங்.. அதாவது, கையில் என்ன பொருள் கிடைக்கிறதோ, பாத்திரம், குச்சி, கிரிக்கெட் மட்டை, துடைப்பம், ரிமோட், என எது கிடைத்தாலும், அதை வைத்தே கணவனை அடித்து துவைப்பாராம்.. இதை பற்றி வெளியில் சொன்னால், பெண்ணுக்கு சாதகமான தீர்ப்புதான் வரும் என்பதால், இதற்கான ஆதாரங்களை சேகரிக்க முடிவு செய்தார் அஜித்சிங்.

 முடியல ஸார்..

முடியல ஸார்..

அதற்காக, மனைவிக்கு தெரியாமல், வீட்டின் எல்லா பகுதிகளிலும் சிசிடிவி கேமராவையும் பதித்துவிட்டார். வழக்கம்போல், அந்த பெண், அஜித்சிங்கை புரட்டி புரட்டி எடுப்பதும் கேமராவில் பதிவானது.. அந்த பதிவுகளை ஆதாரமாக எடுத்துக் கொண்டு, "என்னை காப்பாத்துங்க சார்.. பொண்டாட்டிகிட்ட அடிவாங்க முடியல" என்று போலீசுக்கு ஓடினார்.. அந்த கணவனுக்கு என்ன தீர்வு கிடைத்தது என்று தெரியவில்லை.. ஆனால், இந்த வீடியோ அப்போது பெரும் வைரலானது.

ஹனிமூன்

ஹனிமூன்

இப்போதும் அதுபோலவே ஒரு சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.. அலிகார் மாவட்டம் கண்டேயா கிராமத்தை சேர்ந்த தம்பதி அவர்கள்.. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இவர்களுக்கு கல்யாணமாகி உள்ளது.. புதுமண தம்பதிகள் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று இரு குடும்பத்தினரும் இவர்களுக்கு தனியாகவே ஒரு வீடு எடுத்து தந்துள்ளனர்.. ஆனால், இந்த புதுமண தம்பதிகளோ, கல்யாணம் ஆன நாளில் இருந்தே சண்டை போட்டு வந்துள்ளார்கள்.. அடுத்த சில நாட்களுக்குள்ளேயே, மனைவி டார்ச்சர் தாங்க முடியவில்லை என்று போலீசுக்கு சென்றுள்ளார்.

 நைட் + டார்ச்சர்

நைட் + டார்ச்சர்


ஆனால், இந்த கேஸ் வித்தியாசமானது.. கணவன் போலீசில் சொல்லும்போது, "முதலிரவு அன்றே எங்களுக்குள் தகராறு வெடித்துவிட்டது.. என் மனைவி தண்ணி அடிக்கிறா சார்.. கஞ்சா சாப்பிடுகிறாள்.. நிறைய போதைப் பொருட்களை பயன்படுத்துகிறாள்.. தண்ணி அடித்துவிட்டு, நைட் நேரத்தில் தகராறு செய்கிறாள்.. இப்படித்தான் அன்னைக்கு நைட் தூங்கிட்டு இருந்தேன்.. நைட் 12 மணி இரக்கும்.. என்னை மனைவி எழுப்பி தொந்தரவு செய்கிறாள்.. தூக்கத்தில் இருந்து எழுப்பிவிட்ட ஆத்திரத்தில் எங்களுக்குள் தகராறு வெடித்தது..

 கடித்து கடித்து வைக்கிறார்

கடித்து கடித்து வைக்கிறார்

உடனே என் தலையை பிடித்து, சுவற்றில் மோதிவிட்டாள்.. எனக்கு ரத்தம் மண்டையில் இருந்து கொட்டி, காயம் ஏற்பட்டுவிட்டது.. என்னுடைய கையை இழுத்து வைத்து கடிக்கிறாள்.. உடற்பாகங்களை எல்லாம் கடித்து கடித்து வைக்கிறாள்.. எனக்கும், என்னுடைய அப்பாவுக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறாள்" என்று கதறினார்.. இதையெல்லாம் புகாராக எழுதியும் போலீசில் தந்து, தன் மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கணவன் கேட்டுக் கொண்டார்.

 முத்திப் போயிடுச்சே

முத்திப் போயிடுச்சே

இந்த புகாரை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்... இப்போது கணவனுக்கு மண்டை உடைந்துள்ளதால், மருத்துவமனையில் போலீசாரே அனுமதித்துள்ளனர்.. சிகிச்சையும் நடந்துகொண்டிருக்கிறது.. குடிபோதையில் கணவரை அடித்து துன்புறுத்தி டார்ச்சர் செய்த சம்பவம் எல்லாருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. வேற ஒன்னுமில்ல.. கலி முத்திப்போயிடுச்சு..!

 கண்ணாடி வளையல்

கண்ணாடி வளையல்

இதுவரை மேற்கொண்ட மனைவி நடந்து கொண்டதை வைத்து பார்க்கும்போது, மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாமோ என்று சந்தேகப்படுவதாக கணவர் கூறுகிறார். காரணம், ஒவ்வொரு முறை தகராறு வரும்போதும், கண்ணாடி வளையலை உடைத்து, அதை வைத்தே உடம்பெல்லாம் கிழிக்க முற்படுவாராம்.. ஒருமுறை, தகராறு நடந்தபோதுகூட, தன்னுடைய நெஞ்சில், பற்களை வைத்து கடித்ததாகவும், அப்போது வலியால் துடித்தபோது, அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு, 112 என்ற எண்ணுக்கு தகவல் கொடுத், அதற்கு பிறகே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் சோகத்துடன் கூறுகிறார் கணவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+