பீகார் சட்டசபை தேர்தல்: அக்.12 முதல் நவ.5 வரை 5 கட்டமாக வாக்குப் பதிவு- நவ. 8-ல் வாக்கு எண்ணிக்கை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பீகார் மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் அக்டோபர் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி அறிவித்துள்ளார். இந்த வாக்குகள் அனைத்தும் நவம்பர் 8--ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பீகாரில் கடந்த 2010ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவும் ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து ஆட்சியை அமைத்தது. ஆனால் கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலின் போது இந்த கூட்டணி முறிந்தது.

Five-phase Bihar polls from Oct 12 to Nov 5; counting on Nov 8

இதனைத் தொடர்ந்து நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தள அரசுக்கு லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளித்து வருகிறது. இம்மாநிலத்தின் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கும் 5 கட்டமாக அக்டோபர் 12-ந் தேதி முதல் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையாளர் நஜிம் ஜைதி அறிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியதாவது:

பீகார் மாநிலத்தில் 243 சட்டசபை தொகுதிகளில் 6.68 கோடி பேர் வாக்காளர்கள். இம்மாநிலத்தில் முதல் முறையாக வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இடம்பெறும்.

மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 47 தொகுதிகளில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் துணை ராணுவம் பாதுகாப்புக்கு நிறுத்தப்படும்.

இம்மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே நடைமுறைக்கு வருகின்றன.

முதல் கட்டமாக அக்டோபர் 12-ந் தேதியன்று 49 தொகுதிகளுக்கும்

2வது கட்டமாக அக்ட்போபர் 16-ந் தேதியன்று 32 தொகுதிகளுக்கும்

3வது கட்டமாக அக்டோபர் 28-ந் தேதியன்று 50 தொகுதிகளுக்கும்

4வது கட்டமாக நவம்பர் 1-ந் தேதியன்று 55 தொகுதிகளுக்கும்

5வது கட்டமாக நவம்பர் 5-ந் தேதியன்று 57 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறும்.

இந்த வாக்குகள் அனைத்தும் நவம்பர் 8-ந் தேதியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இவ்வாறு நஜிம் ஜைதி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+