அப்போ அயோத்தி.. இப்போ பத்ரிநாத்.. பாஜகவை சம்பவம் செய்த காங்கிரஸ்.. உத்தரகாண்ட் இடைத்தேர்தலில் வெற்றி
டேராடூன்: பாஜக ஆட்சியில் இருக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2022ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 46 இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைத்தது. அதேபோல 20 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. இவ்விரு கட்சிகள் தவிர பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1 தொகுதியும், சுயேட்டை வேட்பாளர்கள் 2 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தனர். இந்நிலையில் கடந்த 10ம் தேதி பத்ரிநாத் மற்றும் மங்களூரு என இரண்டு தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.

பத்ரிநாத்: இந்த தொகுதியில் கடந்த 2002ம் ஆண்டிலிருந்து தேர்தல் நடைபெற்று வருகிறது. தொகுதியின் தன்மையை பொறுத்தவரை, ஒருமுறை பாஜகவும், அடுத்த முறை காங்கிரசுக்கும் மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். 2002ம் ஆண்டு காங்கிரஸ் இந்த தொகுதியில் வென்றது. இதனை தொடர்ந்து 2007ல் பாஜகவும், 2012ல் காங்கிரசும், 2017ல் பாஜகவும், 2022ல் காங்கிரசும் இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறது.
இப்படி இருக்கையில், 2012 மற்றும் 2022ல் இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ராஜேந்திர சிங் பந்தாரி, திடீரென கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார். இதனால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 10ம் தேதி நடந்த தேர்தலில் 49.80 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.
மங்களூர்: இந்த தொகுதியிலும் 2002லிருந்து தேர்தல் நடைபெற்று வருகிறது. பெரும்பான்மையான தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சிதான் வென்றிருக்கிறது. நடுவில் இரண்டு முறை மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த சார்வாட் கரீம் அன்சாரி அடிப்படையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஆனால், 2012 தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2022 தேர்தலிலும் பகுஜன் சமாஜ் சார்பில் வெற்றி பெற்றார்.
ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி அவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து இந்த தொகுதிக்கு கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 68.24 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
இன்று இரண்டு தொகுதியிலும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட புடோலா 27,696 வாக்குகள் பெற்று, காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் ஐக்கியமான ராஜேந்திர சிங் பண்டாரியை 5,095 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
அதேபோல காங்கிரஸ் மூத்த தலைவருமான நிஜாமுதீன், பாஜகவின் கர்தார் சிங் பதானாவை எதிர்த்து 422 வாக்குகள் வித்தியாசத்தில் 31,727 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்று ஒரு பொதுக்கருத்து நிலவி வருகிறது. அப்படியெனில் பாஜக ஆளும் உத்தரகாண்டில் இரண்டு தொகுதிகளிலும் பாஜக வெட்பாளர்கள்தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்கள். ஏற்கெனவே உத்தரப் பிரதேசத்தில் ராமர் கோயில் இருந்த அயோத்தி அடங்கிய நாடாளுமன்ற தொகுதியில் தங்கள் கட்சியின் வேட்பாளர் பெரும் வெற்றி பெறுவார் என்று பாஜக நம்பிக்கொண்டிருந்தது.
ஆனால், பாஜக தோல்வியடைந்தது. இந்தியா கூட்டணியின் வேட்பாளர் அபார வெற்றி பெற்றார். அதேபோல தற்போது உத்தரகாண்ட் இடைத்தேர்தல் முடிவுகளும் பாஜகவுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது.
-
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட்












Click it and Unblock the Notifications