அன்று காங்-ல் முதல்வர் பதவி கிடைக்காமல் அல்லாட்டம்- இன்றும் பாஜகவில் போராடி வென்ற ஹிமந்த பிஸ்வாஸ்
குவஹாத்தி: டெல்லி காங்கிரஸ் மேலிடம் முதல்வராக்குவதாக ஆசைகாட்டி மோசம் செய்ததால் அந்த கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்த ஹிமந்த பிஸ்வாஸ் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் இடைவிடாத முயற்சியால் தமது முதல்வர் பதவி எனும் இலக்கை எட்டியுள்ளார்.
குவஹாத்தியில் அஸ்ஸாம் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மாநில முதல்வராக ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்வர் நாற்காலியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்பதற்காக கடந்த பல ஆண்டுகளாக பெரும் போராட்டங்களை நடத்தியவர்தான் ஹிமந்த.

காங்கிரஸும் ஹிமந்தவும்
1990களில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட ஹிமந்த, அஸ்ஸாம் காங். எம்.எல்.ஏ.வாக 3 முறை வென்றவர். அஸ்ஸாமில் தருண் கோகாய் தலைமையிலான காங்கிரஸ் அரசில் வேளாண்துறை அமைச்சராக, நிதித்துறை, சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஹிமந்த. 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய அளவில் பெரும் தோல்வியை சந்தித்தது. அப்போதுதான் கலகக்காரராக காங்கிரஸ் உருவெடுத்தார் ஹிமந்த. அஸ்ஸாம் முதல்வராக இருந்த தருண் கோகாயை மாற்றி இளையதலைமுறைக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கினார். அப்போது ஹிமந்தவை சமாதானப்படுத்திய காங்கிரஸ், அடுத்த முதல்வர் நீங்கள்தான் என வாக்குறுதி கொடுத்தது.

ராகுலால் வெளியேறிய ஹிமந்த
இத்தனைக்கும் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் தம் பக்கமே இருக்கின்றனர் என மிரட்டல் விடுத்துதான் இந்த உறுதிமொழியை டெல்லி மேலிடத்திடம் இருந்து பெற்றார் ஹிமந்த. ஆனால் ராகுல் காந்தியோ இதற்கு முட்டுக்கட்டையாக இருந்தார். இதனால் நொந்து போன ஹிமந்த 2015-ல் பாஜகவில் ஐக்கியமானார். காங்கிரஸ் கட்சி மீது அத்தனை கோபத்தையும் வடகிழக்கு மாநிலங்களில் வெளிப்படுத்தினார். வடகிழக்கில் காங்கிரஸ் கட்சியே இல்லாத ஒரு நிலையை உருவாக்க பாஜகவின் அதிரடி தளபதியாக உருவெடுத்தார் ஹிமந்த.

அதிரடி தளபதி
2016 சட்டசபை தேர்தலில் சர்பானந்த சோனாவால் தலைமையில் அஸ்ஸாமில் முதலாவது பாஜக ஆட்சி அமைந்தது. அப்போது சர்பானந்த பாஜகவின் முகமாக அறியப்பட்டிருந்ததால் அமைதிகாத்தார் ஹிமந்த. ஆனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு தம்மை எப்படி ஒரு வலுவான தலைவராக உருவாக்கிக் கொண்டாரோ அதே பாணியை வியூகத்தை இடைவிடாமல் பின்பற்றினார் ஹிமந்த. இதனால் பாஜக வலிமையடைந்தது. அதனாலேயே பாஜக உருவாக்கிய வடகிழக்கு மாநில ஜனநாயக முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ஹிமந்த நியமிக்கப்பட்டார்.

பாஜக வெல்ல காரணம் ஹிமந்த வியூகம்!
தற்போதைய தேர்தலிலும் பாஜகவை வெல்ல வைக்க தாம் காங்கிரஸில் கற்றுக் கொண்ட அத்தனை மொத்த வித்தைகளையும் கொட்டினார். குறிப்பாக அஸ்ஸாமில் பாஜாவை ரொம்பவும் அச்சுறுத்தி மிரட்டிக் கொண்டிருந்த சி.ஏ.ஏ. எதிர்ப்பு வாக்குகளை கூறு போட வைத்ததில் ஹிமந்தவுக்கு மிக முக்கிய பங்கு உண்டு என்கின்றனர் அஸ்ஸாமின் மூத்த பத்திரிகையாளர்கள். ஹிமந்தவின் இந்த வியூகத்தால் மட்டுமே அஸ்ஸாமில் பாஜக ஆட்சியை தக்க வைத்திருந்தது. அதேநேரத்தில் ஹிமந்த மட்டும் இல்லாமல் இருந்தால், நிச்சயம் காங்கிரஸிடம் அஸ்ஸாமை பறிகொடுத்திருக்கும் பாஜக என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

போராடி சாதித்த ஹிமந்த
இதனால்தான் கெத்தாக எனக்குதான் இந்த முறை முதல்வர் பதவி என டெல்லிக்குப் போய் அமித்ஷாவிடம் ஜேபி நட்டாவிடம் மல்லுக்கட்டி சாதித்திருக்கிறார் ஹிமந்த. சி.ஏ.ஏ. எதிர்ப்பு அலை என்பது அஸ்ஸாமில் சுனாமியாக பாஜகவுக்கு எதிராக மையம் கொண்டிருந்ததை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எனும் ஆயுதம் மூலமும் மடைமாற்றியவர் ஹிமந்த என்பதும் மிகையல்ல. முதல்வர் பதவி எனும் இலக்கை அடைவதற்கான இடைவிடாத போராட்டங்களில் காங்கிரஸில் இருந்து சாதிக்க முடியாததை பாஜகவுக்கு தாவி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் ஹிமந்த.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications